சினிமா செய்திகள்

புதிய படத்தில், அனுஷ்கா தோற்றம் + "||" + In the new film, Anushka looks

புதிய படத்தில், அனுஷ்கா தோற்றம்

புதிய படத்தில், அனுஷ்கா  தோற்றம்
அனுஷ்காவுக்கு ஒரு வருடமாக தமிழிலும், தெலுங்கிலும் படங்கள் இல்லை.
கடைசியாக அனுஷ்கா நடித்து பாக்மதி படம் வந்தது. இஞ்சி இடுப்பழகி படத்துக்காக அவர் உடல் எடையை கூட்டியதை பிறகு குறைக்க முடியவில்லை. இதற்காக கடும் உடற்பயிற்சிகள், உணவு கட்டுப்பாடுகள் மேற்கொண்டும் பலன் இல்லை.


அதன்பிறகு வெளிநாட்டுக்கு சென்று சிகிச்சை எடுத்தார். தற்போது எடையை குறைத்து புதிய தோற்றத்துக்கு மாறி இருக்கிறார். இதன் மூலம் தமிழ்–தெலுங்கில் தயாராகும் ‘சைலன்ட்’ என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். படத்தில் அனுஷ்காவின் தோற்றத்தை படக்குழுவினர் வெளியிட்டு உள்ளனர்.

இந்த படத்தில் கதாநாயகனாக மாதவன் நடிக்கிறார். படப்பிடிப்பு விரைவில் தொடங்குகிறது. அனுஷ்கா மீண்டும் நடிப்பது அவரது ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. அனுஷ்கா திருமணம் விரைவில் நடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

புதிய படத்தில் நடிப்பதால் திருமணத்தை தள்ளி வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. நடிகர்களுக்கு இணையாக கதாநாயகிகளுக்கு திரளும் ரசிகர்கள் படை
கதாநாயகர்களுக்கு மட்டுமே ரசிகர் பட்டாளமும், ரசிகர் மன்றங்களும் இருக்கும் என்ற நிலை மாறி சமீப காலமாக கதாநாயகிகளுக்கும் ரசிகர்கள் படை திரள்கிறது. அவர்கள் நடிக்கும் படங்கள் திரையரங்குகளில் அமோகமாக ஓடுகின்றன.