சினிமா செய்திகள்

ஜெயலலிதா வாழ்க்கை படத்தில் சசிகலா வேடத்தில் சாய்பல்லவி? + "||" + Jayalalitha in the film Sai Pallavi in the role of Sasikala?

ஜெயலலிதா வாழ்க்கை படத்தில் சசிகலா வேடத்தில் சாய்பல்லவி?

ஜெயலலிதா வாழ்க்கை படத்தில் சசிகலா  வேடத்தில் சாய்பல்லவி?
மறைந்த முன்னாள் முதல்–அமைச்சர் ஜெயலலிதா வாழ்க்கையை படமாக்க போட்டி நிலவுகிறது.
டைரக்டர்கள் பாரதிராஜா, ஏ.எல்.விஜய், பிரியதர்ஷினி ஆகியோர் இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். பிரியதர்ஷினி இயக்கும் படத்தில் ஜெயலலிதா வேடத்துக்கு நித்யாமேனன் தேர்வாகி உள்ளார். இந்த படத்தின் முதல் தோற்றத்தையும் வெளியிட்டு உள்ளனர். மற்ற கதாபாத்திரங்களுக்கு நடிகர்–நடிகைகள் தேர்வு நடக்கிறது. ஜெயலலிதா பிறந்த நாளில் படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டு உள்ளனர்.


ஏ.எல்.விஜய் இயக்கும் படத்தில் ஜெயலலிதாவாக நடிக்க வித்யாபாலனை தேர்வு செய்து இருப்பதாக கூறப்படுகிறது. இந்தியில் முன்னணி நடிகையாக இருக்கும் வித்யா பாலன் ஏற்கனவே வாழ்க்கை கதை படங்களில் நடித்து இருக்கிறார். தற்போது தெலுங்கில் தயாராகி உள்ள என்.டி.ராமராவ் வாழ்க்கை வரலாறு படத்தில் அவரது மனைவி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

ஜெயலலிதா வாழ்க்கை கதை படத்தில் தோழி சசிகலா வேடத்தில் நடிக்கப்போவது யார்? என்ற பரபரப்பான எதிர்பார்ப்பு நிலவியது.

தற்போது சாய்பல்லவியை சசிகலா வேடத்துக்கு விஜய் தேர்வு செய்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர் பிரேமம் மலையாள படத்தில் நடித்து பிரபலமானார். விஜய் இயக்கிய தியா படத்திலும் நடித்து இருந்தார். தனுஷ் ஜோடியாக நடித்த மாரி–2 படம் திரைக்கு வந்துள்ளது. ஜெயலலிதா சினிமாவில் அறிமுகமானதில் இருந்து அரசியலுக்கு வந்து முதல்–அமைச்சர் ஆனது வரை உள்ள சம்பவங்களை படத்தில் காட்சிபடுத்துகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. டைரக்டர் செல்வராகவனால் சினிமாவை விட்டு விலக நினைத்தேன் - நடிகை சாய்பல்லவி
செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள என்.ஜி.கே. படத்தில் கதாநாயகியாக நடித்துள்ள சாய்பல்லவி சென்னையில் அளித்த பேட்டி வருமாறு:-