சினிமா செய்திகள்

நாளை, ரஜினியின் ‘பேட்ட’ டிரெய்லர் + "||" + Tomorrow, Rajini's 'petta' trailer

நாளை, ரஜினியின் ‘பேட்ட’ டிரெய்லர்

நாளை, ரஜினியின்  ‘பேட்ட’  டிரெய்லர்
ரஜினிகாந்த் நடித்துள்ள ‘பேட்ட’ படம் பொங்கலுக்கு வருகிறது.
தணிக்கை குழுவில் இந்த படத்துக்கு ‘யுஏ’ சான்றிதழ் கிடைத்துள்ளது. இதன் பாடல்கள் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளன. படத்தின் டிரெய்லரை ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் நாளை (28–ந் தேதி) வெளியாகும் என்று பட நிறுவனம் அறிவித்து உள்ளது.


இதனால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். ஏற்கனவே ரஜினியின் தோற்றங்கள் அடுத்தடுத்து வெளியிடப்பட்டன. அதில் இளமையாக இருந்தார். வேட்டி சட்டையிலும் ஒரு தோற்றம் இருந்தது. இந்த படத்தின் கதை மற்றும் கதாபாத்திரம் பற்றி சமூக வலைத்தளங்களில் பல்வேறு யூகங்கள் பரவி வருகின்றன.

ரஜினி விடுதி வார்டனாக நடிக்கிறார் என்றும், பயங்கரவாதிகளுக்கு எதிராக அவர் போராடுவதுதான் கதை என்றும் கூறப்பட்டது. இன்னும் சிலர் தமிழகத்தில் நடக்கும் ஆணவ கொலைகளே படத்தின் கதை என்றனர். ஆனாலும் படக்குழுவினர் உறுதிப்படுத்தவில்லை. இந்த படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கி உள்ளார்.

விஜய் சேதுபதி, சசிகுமார், நவாஜுதீன் சித்திக், திரிஷா, சிம்ரன் ஆகியோர் நடித்துள்ளனர். ரஜினிகாந்த் தற்போது ஓய்வுக்காக அமெரிக்கா சென்றுள்ளார். புத்தாண்டுக்கும் அங்கேயே இருக்கிறார். பேட்ட படம் வெளியான பிறகு சென்னை திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்பிறகு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தில் நடிப்பார் என்று தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. சட்டசபை தேர்தல் எப்போது வந்தாலும் சந்திப்பேன் - நடிகர் ரஜினிகாந்த்
சட்டசபை தேர்தல் எப்போது வந்தாலும் சந்திப்பேன் என நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.
2. இயக்குனர்கள் கே.எஸ்.ரவிக்குமார், வினோத் இயக்கத்தில் மேலும் 2 படங்களில் நடிக்க ரஜினிகாந்த் முடிவு?
ரஜினிகாந்த் அரசியல் பிரவேசத்தை தள்ளி வைத்துவிட்டு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் ‘தர்பார்’ படத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் ஐ.பி.எஸ். அதிகாரியாக வருகிறார்.
3. ரஜினியின் கருத்தை ஏன் அரசியலாக்க வேண்டும்? -குஷ்பு டுவிட்டரில் விமர்சனம்
ரஜினியின் கருத்தை ஏன் அரசியலாக்க வேண்டும்? என்று நடிகை குஷ்பு டுவிட்டரில் விமர்சனம் செய்துள்ளார்.
4. ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது
5. படப்பிடிப்புக்கு பணம் கொடுப்பதில் சிக்கல் : தேர்தலால் தாமதமாகும் ரஜினிகாந்த் படம்
ரஜினிகாந்த் சட்டமன்ற தேர்தலை குறிவைத்துள்ளதால் அவரது அரசியல் பிரவேசம் தள்ளிப்போகிறது. இதற்கிடையில் 2 புதிய படங்களில் நடிக்க திட்டமிட்டுள்ளார்.