சினிமா செய்திகள்

பிரபல நாடக கலைஞரும், நடிகருமான சீனு மோகன் மாரடைப்பால் காலமானார். + "||" + famous theater artist, Actor Seenu Mohan Died of a heart attack.

பிரபல நாடக கலைஞரும், நடிகருமான சீனு மோகன் மாரடைப்பால் காலமானார்.

பிரபல நாடக கலைஞரும், நடிகருமான சீனு மோகன் மாரடைப்பால் காலமானார்.
சிறுநீரக கோளாறால் சிகிச்சை பெற்று வந்த பிரபல நாடக கலைஞரும், நடிகருமான சீனு மோகன் (61) இன்று காலை மாரடைப்பால் காலமானார்.
சென்னை

கிரேஸி மோகனின் நாடகங்களில் சீனு என்ற கதாபாத்திரத்தில் நடித்து சீனு மோகன் என்று அழைக்கப்பட்ட இவர் சுமார் 3000-க்கும் மேற்பட்ட மேடை நாடங்களில் நடித்துவிட்டார். 1989-ல் ’வருஷம் 16’  என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து மணிரத்னம் இயக்கிய அஞ்சலி, தளபதி படங்களில் நடித்தார். 

மேலும், தலைவாசல், இறைவி, ஆண்டவன் கட்டளை, ஸ்கெட்ச், கோலமாவு கோகிலா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். கடைசியாக இவரது நடிப்பில் செக்கச்சிவந்த வானம் ரிலீசானது.

கிரேசி மோகனின் முக்கிய நாடகங்களான 'மர்மதேசம் ரகசியம்', 'மாது ப்ளஸ் டூ', 'மதில்மேல் மாது', 'மேரேஜ் மேட் இன் சலூன்', 'ரிடர்ன் ஆஃப் கிரேசி தீவ்ஸ்' ஆகிய நாடகங்களில் பிரதான பாத்திரங்களில் நடித்துள்ளார் சீனு.

சீனு மோகன் மறைவையொட்டி கிரேசி மோகன் வெளியிட்ட அறிக்கையில் 'கிட்டத்தட்ட 30 வருடங்களாக எங்களது நாடக குழுவில் பணியாற்றியவர் சீனு. இன்று காலை அவர் இறந்த செய்தி கேட்டு நெஞ்சு கனத்துக்கிடக்கிறது.

1979ல் கிரேசி குழுவுக்குள் வந்த எங்கள் ஒவ்வொருவரின் மனதுக்கும் மிகவும் நெருக்கமானவர். தனது அற்புதமான நடிப்பால் லட்சக்கணக்கானோரை கவலை மறந்து சிரிக்கவைத்தவர். அவரது ஆத்மா பூரண சாந்தி அடைய இறைவனை வழிபடுகிறோம்' என்று அந்த இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. மூன்று தேசிய விருதுகள் பெற்ற இந்தி படத்தின் ரீ மேக்கில் நடிக்கும் நடிகர் பிரசாந்த்
கடும் போட்டிக்கு இடையே 'அந்தாதுன்' இந்தி படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை கைப்பற்றினார் தியாகராஜன்.
2. இந்தியையும் நாம் கற்றுக்கொள்ள வேண்டியது அவசியம் -நடிகை சுஹாசினி
பள்ளிகளில் ஆங்கிலத்தின் ஆதிக்கம் அதிகமானதால் தான் தமிழ் மொழியை கற்பது குறைந்துள்ளது என்று நடிகை சுஹாசினி பேசியுள்ளார்.
3. சிறந்த நடிகைக்கான தேசிய விருது கீர்த்தி சுரேஷிற்கு வழங்கப்பட்டுள்ளது ; தேசிய விருது முழு விவரம்
சிறந்த நடிகைக்கான தேசிய விருது நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு படமான மகாநடியில் நடித்ததற்காக ’கீர்த்தி சுரேஷிற்கு’ வழங்கப்பட்டுள்ளது.
4. தல காய்ச்சல் : அஜித் படம் பார்க்க, விடுமுறை கேட்ட நடிகர்
அஜித் திரைப்படம் நாளை இந்தியாவில் வெளியாகும் நிலையில், தமக்கு படப்பிடிப்பில் இருந்து விடுமுறை வழங்குமாறு தயாரிப்பாளரிடம் நடிகர் சிரிஷ் சரவணன் கோரிக்கை விடுத்துள்ளார்.
5. மாநில அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டி : அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றார் நடிகர் அஜித்குமார்
மாநில அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டியில் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார் நடிகர் அஜித்குமார்.