சினிமா செய்திகள்

ஆபாசமாக நடிப்பதா? காஜல் அகர்வாலுக்கு எதிர்ப்பு + "||" + Acting as glamour Resistance to Kajal Agarwal

ஆபாசமாக நடிப்பதா? காஜல் அகர்வாலுக்கு எதிர்ப்பு

ஆபாசமாக நடிப்பதா? காஜல் அகர்வாலுக்கு எதிர்ப்பு
இந்தியில் கங்கனா ரணாவத் நடித்து வெற்றிகரமாக ஓடிய குயின் படம் தமிழில் ‘பாரிஸ் பாரிஸ்’ என்ற பெயரில் ரீமேக் ஆகியுள்ளது. இதில் காஜல் அகர்வால் நடித்துள்ளார்.
ரமேஷ் அரவிந்த் இயக்கி உள்ளார். இந்த படத்தின் டிரெய்லர் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

டிரெய்லரில் கங்கனா அணிந்திருந்த அதேமாதிரி உடையையே காஜல் அணிந்து இருந்தார். ஆனால் அதில் இடம்பெற்றுள்ள ஒரு ஆபாச காட்சி ரசிகர்களை அதிர வைத்தது. காஜல் அகர்வாலை பலரும் கண்டித்து வருகிறார்கள். இதுபோன்ற கேவலமான காட்சிகளில் எதற்காக நடிக்கிறீர்கள்? என்று ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கருத்துக்கள் பதிவிடுகிறார்கள்.


இதுவரை குடும்பப் பாங்கான வேடங்களில் நடித்து விட்டு இப்படி மோசமாக நடிக்கலாமா? என்றும் விமர்சிக்கிறார்கள். காஜலின் ஆபாசமான அந்த காட்சியும் வைரலாகி வருகிறது. இந்த சர்ச்சைகளுக்கு படத்தின் இயக்குனர் ரமேஷ் அரவிந்த் விளக்கம் அளித்துள்ளார்.

அவர் கூறும்போது, ‘‘டிரெய்லரை தனியாக பார்க்கும்போதுதான் அப்படி தெரியும். ஆனால் அதற்கு முன்னாலும் பின்னாலும் வரும் காட்சிகளை சேர்த்து பார்க்கும்போது, அதற்கான காரணம் புரியும். இந்தி படத்திலும் இந்த காட்சி உள்ளது’’ என்றார்.

காஜல் அகர்வால் அடுத்து கமல்ஹாசனுடன் இந்தியன்–2 படத்தில் நடிக்க தயாராகி வருகிறார்.