சினிமா செய்திகள்

ரஷியாவில் வெளியாகும் விஸ்வாசம் + "||" + Vizhvasam is released in Russia

ரஷியாவில் வெளியாகும் விஸ்வாசம்

ரஷியாவில் வெளியாகும் விஸ்வாசம்
அஜித்குமார் நடித்துள்ள ‘விஸ்வாசம்’ படம் ரஷியாவில் வெளியாகிறது. ஏற்கனவே ரஜினிகாந்தின் கபாலி, 2.0 படங்கள் ரஷியாவில் திரையிடப்பட்டு உள்ளன.
 விஜய்யின் சர்கார் படமும் ரஷியாவில் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் அஜித்குமாரின் விஸ்வாசம் படமும் ரஷியாவுக்கு செல்கிறது.

அங்குள்ள 8 முக்கிய நகரங்களில் இந்த படத்தை திரையிட ஏற்பாடு செய்துள்ளனர். உக்ரைனிலும் வெளியாகிறது. விஸ்வாசம் படம் பொங்கல் பண்டிகையையொட்டி ஜனவரி 10–ந் தேதி திரைக்கு வருகிறது. இதில் அஜித்குமார் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். கதாநாயகியாக நயன்தாரா வருகிறார். சத்யராஜ், பிரபு, ஜெகபதிபாபு, ராஜ்கிரண் ஆகியோரும் நடித்துள்ளனர். சிவா இயக்கி உள்ளார். படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளன. டிரெய்லரும் வெளியாக உள்ளது. அடுத்து வினோத் இயக்கும் படத்தில் அஜித்குமார் நடிக்கிறார்.


இந்தியில் அமிதாப்பச்சன், டாப்சி நடித்து வரவேற்பை பெற்ற பிங்க் படத்தின் தமிழ் பதிப்பாக இது தயாராகிறது.

டாப்சியும் அவரது இரண்டு தோழிகளும் இரவு விருந்துக்கு செல்லும்போது அரசியல் செல்வாக்குள்ள ஒரு இளைஞனை தாக்குகின்றனர். அவனால் தொடர்ந்து தொல்லைகள் வருகிறது. பொய்வழக்கிலும் அவர்களை ஜெயிலில் தள்ளுகிறான். அந்த பெண்களுக்காக வக்கீலாக வரும் அமிதாப்பச்சன் வாதாடி வெளியே கொண்டு வருவது கதை. தமிழுக்கு ஏற்ப கதையில் சில மாற்றங்கள் செய்துள்ளனர். இதில் அஜித்குமார் வக்கீலாக நடிக்கிறார்.

தொடர்புடைய செய்திகள்

1. பேட்ட, விஸ்வாசம் படங்கள் ரூ.300 கோடி வசூல்
ரஜினிகாந்தின் ‘பேட்ட’, அஜித்குமாரின் ‘விஸ்வாசம்’ படங்கள் பொங்கல் பண்டிகையையொட்டி கடந்த வாரம் 10-ந் தேதி திரைக்கு வந்து ஓடிக்கொண்டிருக்கிறது.
2. இணையதளத்தில் வெளியான ‘பேட்ட’, ‘விஸ்வாசம்’ படங்கள் படக்குழுவினர் அதிர்ச்சி
பேட்ட, விஸ்வாசம் படங்கள் இணையதளத்தில் வெளியாகி படக்குழுவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
3. ரஜினியின் பேட்ட- அஜித்தின் விஸ்வாசம் முதல் நாள் வசூலில் முந்தியது யார்?
நேற்று வெளியான ரஜினியின் பேட்ட- அஜித்தின் விஸ்வாசம் ஆகியவை முதல் நாள் எப்படி உள்ளது? என்ற விவரம் வெளியாகி உள்ளது.
4. பேட்ட - விஸ்வாசம் திரைப்படங்கள் வெளியானதால் ரசிகர்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
ரஜினிகாந்தின் பேட்ட அஜித்தின் விஸ்வாசம் திரைப்படங்கள் வெளியானதால் ரசிகர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
5. ரஜினியின் “பேட்ட”, அஜித்தின் “விஸ்வாசம்” திரைப்படங்கள் வெளியானது -ரசிகர்கள் கொண்டாட்டம்
ரஜினியின் “பேட்ட”, அஜித்தின் “விஸ்வாசம்” திரைப்படங்கள் இன்று வெளியாகி உள்ளன. இதனை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.