சினிமா செய்திகள்

அமெரிக்காவில் ரஜினிகாந்த் + "||" + Rajinikanth in the US

அமெரிக்காவில் ரஜினிகாந்த்

அமெரிக்காவில் ரஜினிகாந்த்
ரஜினிகாந்த் ‘பேட்ட’ படவேலைகளை முடித்து விட்டு கடந்த வாரம் குடும்பத்தினருடன் அமெரிக்கா புறப்பட்டு சென்றார். அங்கு கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடினார்.
புத்தாண்டுக்கும் ரஜினிகாந்த் அங்கேயே தங்குகிறார். இரண்டு வாரங்கள் ஓய்வு எடுத்து விட்டு சென்னை திரும்புகிறார்.

அமெரிக்காவில் வெளியே செல்லும்போது ரஜினியை ரசிகர்கள் மொய்க்கிறார்கள். செல்பியும் எடுத்துக்கொள்கிறார்கள். அவர்களுடன் நின்று சிரித்த முகத்துடன் போஸ் கொடுக்கிறார். ரசிகர்களின் அன்பு தொல்லையில் இருந்து விடுபட மாறு வேடத்தில் சுற்றுவதாகவும் கூறப்படுகிறது.


இன்னொருபுறம் அரசியல் வி‌ஷயங்கள் குறித்தும் அங்கு விரிவாக ஆலோசிக்கிறார். ரஜினி மக்கள் மன்றத்துக்கு நிர்வாகிகள் நியமித்து அரசியலுக்கான முன்னேற்பாடுகள் ஏற்கனவே விறுவிறுப்பாக தொடங்கி உள்ளன. உறுப்பினர் சேர்க்கையும் நடக்கிறது. கட்சி எப்போது தொடங்குவார் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

அமெரிக்காவில் நெருக்கமான பிரமுகர்கள் சிலருடன் அரசியல்  குறித்து ஆலோசிப்பதாகவும் கட்சி கொள்கை திட்டங்கள் குறித்து விவாதிப்பதாகவும் கூறப்படுகிறது. அனைத்து மாவட்ட நிர்வாகிகளின் செயல்பாடுகள் குறித்து தகவல்கள் திரட்டி ஆய்வு செய்கிறார். அரசியலை வைத்து சம்பாதிக்க நினைப்பவர்களை பக்கத்தில் நெருங்க விடமாட்டேன் என்று ஏற்கனவே எச்சரித்து உள்ளார்.

எனவே சமூக சேவை உள்ளிட்ட மக்கள் நலப் பணிகளில் ஆர்வம் உள்ளவர்கள்தான் பதவிகளில் இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார். சென்னை திரும்பும்போது கட்சி தொடங்குவதற்கான முழு திட்டங்களோடு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், அமெரிக்காவில் ரஜினியுடன் இருக்கும் புகைப்படத்தை நடிகர் தனுஷ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். இந்த படம் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. ‘ரஜினிகாந்த் நிலையான அரசியல் கட்சியை நடத்த முடியாது’ ஆர்.எம்.வீரப்பன் பேட்டி
ரஜினிகாந்த் நிலையான அரசியல் கட்சியை நடத்த முடியாது என்று ஆர்.எம்.வீரப்பன் கூறினார்.
2. ரஜினியின் பேட்ட - அஜித்தின் விஸ்வாசம் கூடுதல் வசூல் யார்? அதிகாரபூர்வ அறிவிப்பு
ரஜினியின் பேட்ட, அஜித்தின் விஸ்வாசம் தமிழக பாக்ஸ் ஆபிஸ் கலெக்சன் விவரம் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டு உள்ளது.
3. முருகதாஸ் படத்தில் போலீஸ் அதிகாரியாக ரஜினிகாந்த்?
ரஜினிகாந்த் நடிப்பில் ‘2.0’ படத்துக்கு பிறகு ‘பேட்ட’ படம் திரைக்கு வந்து ஓடிக்கொண்டு இருக்கிறது. மீண்டும் ஒரு புதிய படத்தில் நடிக்க தயாராகி உள்ளார்.
4. சென்னை போயஸ் கார்டன் இல்லம் முன் குவிந்த ரசிகர்களுக்கு ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து
சென்னை போயஸ் கார்டன் இல்லம் முன் குவிந்த ரசிகர்களுக்கு ரஜினிகாந்த் இன்று பொங்கல் வாழ்த்தை தெரிவித்தார்.
5. முருகதாஸ் படத்திலும் இளமை தோற்றம் : ரஜினிகாந்த் ஜோடியாக கீர்த்தி சுரேஷ்?
ரஜினிகாந்த் நடிப்பில் ‘2.0’ படத்துக்கு பிறகு ‘பேட்ட’ படம் திரைக்கு வந்துள்ளது. சமீபத்தில் ஓய்வுக்காக அமெரிக்கா சென்றுவிட்டு சென்னை திரும்பிய அவர் தற்போது புதிய படத்தில் நடிக்க தயாராகிறார்.