சினிமா செய்திகள்

இசையமைப்பாளருடன் நடிகை மடோனா காதல்? + "||" + Actress Madonna love with music composer?

இசையமைப்பாளருடன் நடிகை மடோனா காதல்?

இசையமைப்பாளருடன் நடிகை  மடோனா காதல்?
மலையாளத்தில் ‘பிரேமம்’ படத்தில் செலின் கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் மடோனா செபாஸ்டியன். அந்த படத்துக்கு பிறகு அவருக்கு படங்கள் குவிந்தன.
தமிழில் விஜய் சேதுபதியுடன் காதலும் கடந்து போகும், கவண் மற்றும் பவர் பாண்டி ஆகிய படங்களில் மடோனா செபாஸ்டியன் நடித்துள்ளார்.

தற்போது கொம்பு வச்ச சிங்கம்டா என்ற தமிழ் படத்திலும், ஒரு கன்னட படத்திலும் நடித்து வருகிறார். படங்களை தேர்வு செய்வது குறித்து அவர் கூறும்போது, ‘‘நான் கதைகள் தேர்வில் கவனமாக இருக்கிறேன். எந்த வகையான படங்களை தேர்வு செய்ய வேண்டும் என்று எனக்கு தெரியும். குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடவும் விரும்புகிறேன்’’ என்றார்.


இந்த நிலையில் இசையமைப்பாளர் ராபி ஆபிரகாமுடன் சேர்ந்து எடுத்த புகைப்படம் ஒன்றை மடோனா தனது சமூக வலைத்தள பக்கத்தில் தற்போது வெளியிட்டார். அந்த படத்தில், ‘‘சிலருடைய பக்கத்தில் இருக்கும்போது மட்டும்தான் நாம் நாமாக இருக்க முடியும். அதுதான் உண்மையான சுதந்திரம். அப்படி ஒருவர் எனது வாழ்க்கையில் இருப்பது அதிர்ஷ்டம்’’ என்று பதிவிட்டுள்ளார்.

இது பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மடோனா செபாஸ்டியனும், ராபி ஆபிரகாமும் காதலிப்பதாகவும் கிசுகிசுக்கள் பரவி உள்ளன. இதனை மடோனா இதுவரை மறுக்கவில்லை.