சினிமா செய்திகள்

‘பேட்ட’ டிரெய்லர் வெளியானது : ‘பாட்ஷா’ ஸ்டைலில் அசத்தும் ரஜினி + "||" + 'Petta' Trailer Released: 'Rajini' in 'Badshah' style

‘பேட்ட’ டிரெய்லர் வெளியானது : ‘பாட்ஷா’ ஸ்டைலில் அசத்தும் ரஜினி

‘பேட்ட’ டிரெய்லர் வெளியானது : ‘பாட்ஷா’  ஸ்டைலில் அசத்தும் ரஜினி
ரஜினிகாந்த் நடித்து பொங்கலுக்கு திரைக்கு வரும் பேட்ட படத்தின் டிரெய்லர் நேற்று காலை 11 மணிக்கு வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்து இருந்தனர்.
முன்னதாகவே டிரெய்லரின் சில காட்சிகள் சமூக வலைத்தளத்தில் கசிந்ததால் படக்குழுவினர் அதிர்ச்சியாகி நேரத்தை மாற்றி காலை 10.25 மணிக்கே வெளியிட்டு விட்டனர்.

டிரெய்லரில், ‘‘20 பேரை அனுப்பி வச்சேன். எல்லோரையும் அடிச்சி துவைச்சிட்டான்’’ என்று விஜய் சேதுபதி குரல் ஒலிக்க அதிரடி படம் போல் காட்சி தொடங்குகிறது. பதிலுக்கு யாருடா அவன் என்று கேள்வி எழும்ப, ‘‘காளி.. வேறு எந்த டீடெய்லும் தெரியல’’ என்று பாபிசிம்ஹா விரக்தியுடன் கூறுகிறார்.


இன்னொரு காட்சியில் ‘‘ஒருத்தண்ணே யாரோ ஹாஸ்டல் வார்டனாம். மரண காட்டு காட்டுறான்’’ என்று ஒருவர் பேசுகிறார். இதன் மூலம் ரஜினி கதாபாத்திரம் விடுதி வார்டன் என்பதை உறுதிப்படுத்தி உள்ளனர். தொடர்ந்து ரஜினி பாட்ஷா பட ஸ்டைலில் நாற்காலியில் கெத்தாக அமர்ந்து இருக்கிறார்.

‘‘அடிச்சு அண்டர்வேரோட ஓட விட்ருவேன், பாத்துக்கோ, மானம் போனா திரும்ப வராது. பாக்கத்தான் போற இந்த காளியோட ஆட்டத்த.. சிறப்பான தரமான சம்பவங்களை இனிதான் பாக்க போற. டேய் எவனுக்காவது பொண்டாட்டி புள்ளக்குட்டின்னு செண்டிமென்ட் இருந்தா அப்படியே ஓடிப்போயிடு. கொல காண்டுல இருக்கேன் மவனே கொல்லாம விடமாட்டேன்’’ என்று ரஜினி பேசும் வசனங்கள் செம மாஸாக இருப்பதாக ரசிகர்கள் துள்ளுகிறார்கள்.

ரஜினியின் தோற்றம் இளமையாகவும், ஸ்டைலாகவும் உள்ளது. அதிரடி சண்டைகளில் வேகம் காட்டி இருக்கிறார். நவாசுதீன் சித்திக், விஜய்சேதுபதி தோற்றங்கள் மிரட்டலாக உள்ளன. சிம்ரனின் காதல் காட்சிகள் கவர்கின்றன. மீண்டும் 1980 காலத்து ரஜினியை திரைக்கு கொண்டு வந்து இருக்கிறார் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ்.

படம் பொங்கல் பண்டிகையில் ரசிகர்களுக்கு செம தீனியாக அமையும் என்று டிரெய்லர் உறுதி கொடுக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

1. சட்டசபை தேர்தல் எப்போது வந்தாலும் சந்திப்பேன் - நடிகர் ரஜினிகாந்த்
சட்டசபை தேர்தல் எப்போது வந்தாலும் சந்திப்பேன் என நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.
2. இயக்குனர்கள் கே.எஸ்.ரவிக்குமார், வினோத் இயக்கத்தில் மேலும் 2 படங்களில் நடிக்க ரஜினிகாந்த் முடிவு?
ரஜினிகாந்த் அரசியல் பிரவேசத்தை தள்ளி வைத்துவிட்டு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் ‘தர்பார்’ படத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் ஐ.பி.எஸ். அதிகாரியாக வருகிறார்.
3. ரஜினியின் கருத்தை ஏன் அரசியலாக்க வேண்டும்? -குஷ்பு டுவிட்டரில் விமர்சனம்
ரஜினியின் கருத்தை ஏன் அரசியலாக்க வேண்டும்? என்று நடிகை குஷ்பு டுவிட்டரில் விமர்சனம் செய்துள்ளார்.
4. ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது
5. படப்பிடிப்புக்கு பணம் கொடுப்பதில் சிக்கல் : தேர்தலால் தாமதமாகும் ரஜினிகாந்த் படம்
ரஜினிகாந்த் சட்டமன்ற தேர்தலை குறிவைத்துள்ளதால் அவரது அரசியல் பிரவேசம் தள்ளிப்போகிறது. இதற்கிடையில் 2 புதிய படங்களில் நடிக்க திட்டமிட்டுள்ளார்.