சினிமா செய்திகள்

கதாநாயகியாகும், ஸ்ரீதேவியின் 2-வது மகள் குஷி + "||" + Heroine, Sridevi's 2nd daughter Kushi

கதாநாயகியாகும், ஸ்ரீதேவியின் 2-வது மகள் குஷி

கதாநாயகியாகும், ஸ்ரீதேவியின் 2-வது மகள் குஷி
ஸ்ரீதேவியின் 2-வது மகள் குஷி, கதாநாயகியாக அறிமுகமாக உள்ளார்.

நடிகை ஸ்ரீதேவிக்கு ஜான்வி, குஷி என்று 2 மகள்கள். இதில் ஜான்வி பிரபல இந்தி இயக்குனர் கரண் ஜோகர் இயக்கிய ‘தடக்’ இந்தி படம் மூலம் கதாநாயகியானார். மராத்தி மொழியில் வெற்றிகரமாக ஓடிய ‘சாய்ராட்’ படத்தின் இந்தி பதிப்பாக தயாரானது. இந்த படம் திரைக்கு வரும் முன்பு ஸ்ரீதேவி துபாயில் ஓட்டல் குளியல் அறை தொட்டியில் மூழ்கி இறந்து போனார்.

மேலும் புதிய படங்களில் நடிக்க ஜான்வி கதை கேட்டு வருகிறார். தமிழ், தெலுங்கு படங்களில் நடிக்கவும் அவருக்கு விருப்பம் உள்ளது. இந்த நிலையில் ஸ்ரீதேவியின் 2-வது மகள் குஷியும் நடிகையாகிறார். இவரையும் கரண் ஜோகரே தனது படத்தில் அறிமுகப்படுத்துகிறார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, “ஸ்ரீதேவி மகள் குஷியை கதாநாயகியாக அறிமுகப்படுத்தும் முயற்சியில் இருக்கிறேன். அதற்கான கதையை தயார் செய்து வருகிறேன். படம் பற்றிய தகவலை விரைவில் வெளியிடுவேன்” என்றார்.

ஜான்வி, குஷியின் தந்தை போனிகபூர் இந்தி படங்கள் தயாரித்து வந்தார். அவர் தற்போது தமிழில் அஜித்குமார் நடிக்கும் படத்தை தயாரிக்கிறார். இந்தியில் அமிதாப்பச்சன், டாப்சி நடித்து வெற்றி பெற்ற பிங்க் படத்தின் தமிழ் பதிப்பாக இது தயாராகிறது. வினோத் இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு தொடங்கி உள்ளது.