சினிமா செய்திகள்

ஐதராபாத்தில் நிச்சயதார்த்தம்: நடிகர் விஷால் திருமணம் - ஆந்திரா பெண்ணை மணக்கிறார் + "||" + Engagement in Hyderabad: Actor Vishal's marriage - marries Andhra girl

ஐதராபாத்தில் நிச்சயதார்த்தம்: நடிகர் விஷால் திருமணம் - ஆந்திரா பெண்ணை மணக்கிறார்

ஐதராபாத்தில் நிச்சயதார்த்தம்: நடிகர் விஷால் திருமணம் - ஆந்திரா பெண்ணை மணக்கிறார்
ஐதராபாத்தில் நடிகர் விஷாலின் நிச்சயதார்த்தம் நடைபெற உள்ளது. ஆந்திரா பெண்ணை மணக்க உள்ளார்.
தமிழில் ‘செல்லமே’ படத்தில் கதாநாயகனாக அறிமுகமனாவர் விஷால். 2004-ல் இந்த படம் வெளியானது. தொடர்ந்து சண்டக்கோழி, திமிரு, சிவப்பதிகாரம், தாமிரபரணி, மலைக்கோட்டை, சத்யம், தோரணை, தீராத விளையாட்டு பிள்ளை, அவன் இவன், சமர், பட்டத்து யானை, பாண்டியநாடு, பூஜை, ஆம்பள, பாயும்புலி, மருது, கதகளி, துப்பறிவாளன், இரும்புத்திரை உள்பட பல படங்களில் நடித்துள்ளார். சில படங்களை தயாரிக்கவும் செய்தார்.


தென்னிந்திய நடிகர் சங்க பொதுச் செயலாளராகவும், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவராகவும் பொறுப்பு வகிக்கிறார். விஷாலை ஒரு நடிகையுடன் இணைத்து கிசுகிசுக்கள் வந்தன. நடிகர் சங்கத்துக்கு புதிய கட்டிடம் கட்டி முடித்ததும் திருமணம் செய்து கொள்வேன் என்று கூறினார்.

நடிகர் சங்க கட்டிட வேலைகள் இறுதி கட்டத்தில் உள்ளன. மார்ச் அல்லது ஏப்ரல் மாதம் பணிகள் முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் விஷாலுக்கு பெண்பார்க்கும் முயற்சியில் பெற்றோர் ஈடுபட்டு தற்போது மணமகளை தேர்வு செய்துள்ளனர்.

மணப்பெண்ணின் பெயர், அனிஷா. ஆந்திராவை சேர்ந்தவர். விஷால்-அனிஷா திருமண நிச்சயதார்த்தம் ஐதராபாத்தில் நடக்க உள்ளது. இதற்காக விஷால், குடும்பத்தினருடன் ஐதராபாத் செல்கிறார். நிச்சயதார்த்தத்தில் திருமண தேதியை முடிவு செய்கிறார்கள்.

விஷாலுக்கு மணமகள் முடிவானதையும் ஐதராபாத்தில் நிச்சயதார்த்தம் நடப்பதையும் அவரது தந்தையும் தயாரிப்பாளருமான ஜி.கே.ரெட்டி தினத்தந்தி நிருபரிடம் தெரிவித்தார்.


தொடர்புடைய செய்திகள்

1. எமி ஜாக்சன் நிச்சயதார்த்தம்
எமி ஜாக்சனுக்கு அவருடைய காதலருடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
2. ஐதராபாத்தில் போனில் முத்தலாக் கூறி மனைவியை விவாகரத்து செய்தவர் மீது வழக்கு
ஐதராபாத்தில் போனில் முத்தலாக் கூறி மனைவியை விவாகரத்து செய்தவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
3. சிறைத்துறை நடத்திய முகாம்: 155 முன்னாள் கைதிகளுக்கு வேலைவாய்ப்பு
ஐதராபாத்தில் சிறைத்துறை நடத்திய முகாமில், 155 முன்னாள் கைதிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டது.
4. ஐதராபாத்: நாட்டிலேயே முதல் முறையாக நாய்களுக்கான பூங்கா விரைவில் திறக்கப்படுகிறது
நாட்டிலேயே முதல் முறையாக நாய்களுக்கான பூங்கா ஐதராபாத்தில் விரைவில் திறக்கப்படுகிறது.
5. ஐதராபாத் நிஜாம் மியூசியத்தில் தங்க டிபன் பாக்ஸை திருடிய திருடர்கள் சிக்கினர்
ஐதராபாத் நிஜாம் மியூசியத்தில் தங்க டிபன் பாக்ஸை திருடிய திருடர்களை போலீஸ் கைது செய்துள்ளது.