சினிமா செய்திகள்

அஜித்தின் ‘விஸ்வாசம்’ டிரெய்லர் வெளியானது - ரசிகர்கள் உற்சாகம் + "||" + Ajith's 'Vishwamam' trailer released - Fans are enthusiastic

அஜித்தின் ‘விஸ்வாசம்’ டிரெய்லர் வெளியானது - ரசிகர்கள் உற்சாகம்

அஜித்தின் ‘விஸ்வாசம்’ டிரெய்லர் வெளியானது - ரசிகர்கள் உற்சாகம்
அஜித்தின் விஸ்வாசம் டிரெய்லர் வெளியானது. இதனை ரசிகர்கள் உற்சாகமாக டிரெண்ட் செய்து வருகிறார்கள்.
அஜித்குமார்-நயன்தாரா ஜோடியாக நடித்துள்ள ‘விஸ்வாசம்’ படம் பொங்கல் பண்டிகையை யொட்டி அடுத்த மாதம் (ஜனவரி) 10-ந்தேதி வெளியாகிறது. ரஜினிகாந்தின் ‘பேட்ட’ படமும் இதே நாளில் வருவதால் இரண்டு படங்களுக்கும் போட்டி ஏற்பட்டு உள்ளது.


விஸ்வாசம் படத்தின் டிரெய்லர் நேற்று சமூக வலைத்தளத்தில் வெளியானது. “வாழ்க்கையில் ஒரு தடவை அழாத பணக்காரனும் இல்ல. ஒரு தடவை சிரிக்காத ஏழையும் இல்ல” என்று பஞ்ச் பேசி வேட்டியை மடிச்சு மீசையை முறுக்கி அஜித் அட்டகாசமாக அறிமுகமாகிறார். “பங்காளிகளா அடிச்சு தூக்கலாமா” என்று பேசி அரிவாளுடன் வருபவர்களை வயக்காட்டில் துவம்சம் செய்கிறார்.

கலப்பையை சுமந்து வருகிறார். நயன்தாரா சேலையில் புல்கட்டு சுமக்கிறார். அவரை பார்த்து நீங்க பேரழகு என்று அஜித் வர்ணிப்பது இன்னொரு அழகு. என் கதையில் நான் ஹீரோடா என்று சொல்லும் ஜெகபதி பாபுவுக்கு. என் கதையில் நான் வில்லன்டா என்று பதிலடி தருகிறார். உங்க மேல கொல கோவம் வரணும். ஆனா உங்களை எனக்கு பிடிச்சிருக்கு சார் என்கிறார்.

இறுதி காட்சியில் “ஏறி மிதிச்சேன்னு வை ஏரியா வாங்கிறது இல்லை. மூச்ச கூட வாங்க முடியாது. பேரு தூக்கு துரை. தேனி மாவட்டம். ஊர் கொடுவிழார் பட்டி. மனைவி நிரஞ்சனா, பெண் பெயர் சுவேதா. ஒத்தைக்கு ஒத்தை வாடா” என்கிறார். எதிரிகளை ஆவேசமாக பந்தாடுவது மழையில் பைக்கின் பின் டயரால் வில்லனை நசுக்குவது என்று அஜித்தின் அதிரடிகள் மாஸாக இருப்பதாக ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

விவசாயத்தை தொடர்புபடுத்தும் கதைபோல் காட்சிகள் உள்ளன. டிரெய்லர் ரசிகர்களால் சமூக வலைத்தளத்தில் டிரெண்டிங் ஆகி உள்ளது. சிறிது நேரத்திலேயே பல லட்சம் பேர் பார்த்தனர்.


தொடர்புடைய செய்திகள்

1. விஸ்வாசம் - இந்த வருடத்தின் பெரிய வெற்றி!
இந்த வருடத்தின் பெரிய வெற்றி பெற்ற முதல் படம் என்ற பெருமை அஜித்குமார் நடித்த ‘விஸ்வாசம்’ படத்துக்கு கிடைத்து இருக்கிறது.
2. அஜித் படம், சீனாவில் வெளியாகுமா?
போனிகபூர் தயாரித்து, அவருடைய மனைவி நடிகை ஸ்ரீதேவி நடித்த `மாம்' படம், சீனாவில் வெளியிடப்பட்டது.
3. எளிமை, ஆளுமை திறன், கூச்சம் ; அஜித்தை பாராட்டிய வித்யாபாலன்
மறைந்த நடிகை சில்க் சுமிதா வேடத்தில் ‘த டர்டி பிக்சர்’ படத்தில் நடித்து சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்றவர் வித்யாபாலன்.
4. முன்கூட்டியே திரைக்கு வருகிறது?
அஜித் நடித்து, போனிகபூர் தயாரிப்பில், எச்.வினோத் டைரக்டு செய்துள்ள படம், ‘நேர்கொண்ட பார்வை.’’
5. சில மாற்றங்களுடன்...‘பிங்க்’
‘பிங்க்’ (இந்தி) படம் சில மாற்றங்களுடன் தமிழில் படமாகிறது.