சினிமா செய்திகள்

'பேட்ட' படத்தின் டிரெய்லரின் ஒரு நாள் சாதனையை, 9 மணி நேரத்தில் முறியடித்த 'விஸ்வாசம்' + "||" + Viswasam - Official Trailer Ajith Kumar, Nayanthara

'பேட்ட' படத்தின் டிரெய்லரின் ஒரு நாள் சாதனையை, 9 மணி நேரத்தில் முறியடித்த 'விஸ்வாசம்'

'பேட்ட' படத்தின் டிரெய்லரின் ஒரு நாள் சாதனையை, 9 மணி நேரத்தில் முறியடித்த 'விஸ்வாசம்'
ரஜினிகாந்தின் 'பேட்ட' படத்தின் டிரெய்லரின் ஒரு நாள் சாதனையை, அஜித்தின் ’விஸ்வாசம்' 9 மணி நேரத்தில் முறியடித்து உள்ளது.
சென்னை, 

அஜித்தின் விஸ்வாசம் படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது. இதை செம டிரெண்ட்டாக்கி வருகின்றனர் ரசிகர்கள்.

பொங்கல் வெளியீடாக அஜித்தின் விஸ்வாசம் படம் வெளியாக உள்ளது. இந்த படத்தை ரசிகர்கள் வெகுவாக எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

சிவா இயக்கத்தில் அஜித், நயன்தாரா உள்ளிட்டோர் நடித்துள்ள விஸ்வாசம் படத்தின் அப்டேட்டுகள் இணையத்தை கலக்கி வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டது.

இதுவும் ரசிகர்களால் அதிகளவில் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

நடிகர் அஜித்தின் 'விஸ்வாசம்' பட டிரெய்லர், இதுவரை எந்த தென் இந்திய சினிமாவும் செய்யாத புது வரலாறு படைத்துள்ளது. சுமார் 10 லட்சம் 'லைக்ஸ்' பெற்ற முதல் தென்னிந்திய திரைப்படம் இது தான். சமூக வலைதளங்களில் தொடர்ந்து முதலிடத்திலும் உள்ளது. 'பேட்ட' படத்தின் டிடிரெய்லரின் ஒரு நாள் சாதனையை 9 மணி நேரத்தில் 'விஸ்வாசம்' முறியடித்துள்ளது. தொடர்புடைய செய்திகள்

1. 2 வருடம் கழித்து ஷேவ் செய்த நடிகர் மாதவன்
நடிக்கும் சினிமாவுக்காக நடிகர் மாதவன் 2 வருடம் கழித்து ஷேவ் செய்துள்ளார்.
2. நடிகர் விஷாலுக்கு அக்டோபர் 9-ந் தேதி திருமணம்
நடிகர் விஷாலுக்கும் அவரது காதலியான அனிஷாவுக்கும் சமீபத்தில் திருமண நிச்சயதார்த்தம் நடந்த நிலையில் இவர்களது திருமண தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
3. நடிகர் விஷாலின் அயோக்யா வெளியாகவில்லை : ரசிகர்கள் ஏமாற்றம் !
நடிகர் விஷாலின் அயோக்யா வெளியாகவில்லை. இதனால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்து உள்ளனர்.
4. பெண்களின் பொய்யான செக்ஸ் புகாரில் இருந்து ஆண்களை பாதுகாக்க "மென் டூ" இயக்கம்
ஆண்களுக்கு எதிராக பழி தீர்ப்பதற்காக, பாலியல் குற்ற வழக்குகளை பெண்கள் தவறாக பயன்படுத்துவதாக கூறி "மென் டூ" என்ற இயக்கத்தை, சமீபத்தில் பாலியல் குற்றவழக்கில் கைது செய்யப்பட்ட நடிகரின் நண்பர்கள் துவங்கியுள்ளனர். #mentoo
5. நடிகர் பார்த்திபன் தன்னை தாக்கியதாக உதவியாளர் புகார்
நடிகர் பார்த்திபன் தன்னை தாக்கியதாக, அவரது உதவியாளர் நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.