சினிமா செய்திகள்

கவிஞர் வைரமுத்து புத்தாண்டு வாழ்த்து "புதுமை கொள்வோம்; போராடி வெல்வோம்" + "||" + Vairamuthu New Year Greeting

கவிஞர் வைரமுத்து புத்தாண்டு வாழ்த்து "புதுமை கொள்வோம்; போராடி வெல்வோம்"

கவிஞர் வைரமுத்து புத்தாண்டு வாழ்த்து "புதுமை கொள்வோம்; போராடி வெல்வோம்"
நாளை 2019-ம் ஆண்டு பிறப்பதையொட்டி கவிஞர் வைரமுத்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சென்னை,

ஆங்கில புத்தாண்டு 2019 பிறப்பதையொட்டி உலகம் முழுக்க கோலாகல கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  தமிழகம் முழுவதும் கோயில்கள், தேவாலயங்களில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகளுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.  நட்சத்திர ஓட்டல்கள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட பல இடங்களில் கொண்டாட்டங்களுக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

இந்நிலையில் 2019-ம் ஆண்டு பிறப்பதையொட்டி கவிஞர் வைரமுத்து புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் டுவிட்டரில் கூறியிருப்பதாவது:

ஆண்டில் ஏது பழையதும் புதியதும்? நம்மை நாமே புதுப்பித்துக் கொண்டால் நாளும் புதியதாகும். புதுமை கொள்வோம்; போராடி வெல்வோம். வாழ்த்துக்கள். #2019 #HappyNewYears2019 #HappyNewYear