சினிமா செய்திகள்

''முன்னாள் காதலர் எச்சரித்தும் கேட்கவில்லை” மனம் திறந்த மனிஷா கொய்ராலா + "||" + ‘Cancer became a metaphor for all that was wrong in my life’ Manisha Koirala on her new book

''முன்னாள் காதலர் எச்சரித்தும் கேட்கவில்லை” மனம் திறந்த மனிஷா கொய்ராலா

''முன்னாள் காதலர் எச்சரித்தும் கேட்கவில்லை” மனம் திறந்த மனிஷா கொய்ராலா
புகழின் உச்சியில் இருந்த நடிகை மனிஷா கொய்ராலா, தாம் புற்றுநோயில் இருந்து மீண்டது குறித்து உருக்கம் தெரிவித்துள்ளார்.
மும்பை,

தமிழ் சினிமாவில் பம்பாய், முதல்வன், பாபா, மாப்பிள்ளை உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் நடிகை மனிஷா கொய்ராலா. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டார். 

இதையடுத்து, சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றார். அங்கு சிகிச்சை பெற்று நன்கு குணமடைந்த பின்பு மீண்டும் படங்களில் நடித்து வருகிறார். 

இந்நிலையில் தாம் புற்று நோயில் இருந்து மீண்டது குறித்து உருக்கமாக தெரிவித்துள்ளார். இது குறித்து "HEALED" என்ற பெயரில் அவர் வெளியிட்ட புத்தகத்தில், பல்வேறு தகவல்களை பகிர்ந்துள்ளார். 

 ''தமது காலடியில் இந்த உலகமே இருப்பதாக  நினைப்பு இருந்ததாகவும், இடைவிடாத படப்பிடிப்புகளால் 1999ம் ஆண்டுகளில், உடலும் உள்ளமும் பலவீனமானது என்று குறிப்பிட்டுள்ளார்.

 ''மீள்வதற்கு என்ன வழி? மதுவைத் தவிர என்று தெரிவித்துள்ள அவர், தமது முன்னாள் காதலர் எச்சரித்தும் கேட்கவில்லை, தவறான முடிவுகளை எடுத்ததாக அந்த புத்தகத்தில் எழுதியுள்ளார்.