சினிமா செய்திகள்

வலைத்தளத்தில் கஸ்தூரி மீண்டும் மோதல் + "||" + Clash of the Kasthuri back to the website

வலைத்தளத்தில் கஸ்தூரி மீண்டும் மோதல்

வலைத்தளத்தில் கஸ்தூரி மீண்டும் மோதல்
வலைத்தளத்தில் நடிகை கஸ்தூரி மீண்டும் மோதிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.

நடிகை கஸ்தூரி சமூக, அரசியல் விஷயங்களை சமூக வலைத்தளத்தில் துணிச்சலாக பேசி வருகிறார். அவரை ஒரு அரசியல் கட்சியில் சேர்க்க முயற்சி நடந்தது. இப்போது எந்த கட்சியிலும் சேரமாட்டேன் என்று மறுத்தார். ரஜினிகாந்த் படத்தை டுவிட்டர் முகப்பில் வைத்திருந்த ஒருவர் கஸ்தூரி பற்றி அவதூறாக பேசியதால் அவருடன் மோதினார்.

ரஜினி பெயரை கெடுக்க இதுமாதிரி எத்தனைபேர் அலைகிறார்களோ? என்றார். இந்த நிலையில் அஜித் ரசிகர்களுக்கும் கஸ்தூரிக்கும் சில நாட்களாக மோதல் நீடித்து வருகிறது. ‘தல’ வார்த்தையுடன் தன்பெயரை வைத்திருந்த ரசிகர் கஸ்தூரியின் பதிவுக்கு ஆபாசமான கருத்தை வெளியிட்டார்.

இதுபோல் அவரது இன்னொரு பதிவையும் அஜித் பெயரை சேர்த்து தனது பெயரில் வைத்திருந்த ஒருவர் கண்டித்தார். இதற்கு பதில் அளித்த கஸ்தூரி இது தெரிந்துதான் ரசிகர் மன்றத்தை எப்போதோ கலைத்து விட்டார் என்றார். தனிப்பட்ட ஒருவர் கருத்துக்காக அஜித் பெயரை இழுக்க வேண்டாம் என்று அவரது ரசிகர்கள் கஸ்தூரியை கடுமையாக கண்டித்தனர்.

இந்த மோதல் நீடித்த நிலையில் தற்போது இன்னொரு ரசிகரும் கஸ்தூரி பற்றி அவதூறு கருத்தை பதிவிட்டுள்ளார். இதற்கு பதிலளிக்கும் விதமாக கஸ்தூரி, “மானம் ரோஷம் உள்ள அஜித் ரசிகர்களுக்கு அன்பான வேண்டுகோள். இந்த கூமுட்டையின் விவரம் தெரிந்தவர்கள் என்னை அணுகவும்” என்று பதிவிட்டுள்ளார். இவர்கள் மோதல் சமூக வலைத்தளத்தில் பரபரப்பாக உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. கதிர்காமம் தொகுதியை மீண்டும் காங்கிரஸ் கோட்டையாக மாற்றுவோம் நாராயணசாமி உறுதி
கதிர்காமம் தொகுதியை மீண்டும் காங்கிரஸ் கோட்டையாக மாற்றுவோம் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.
2. சிலநாள் மந்த நிலைக்குப்பின், சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் மீண்டும் அலைமோதியது
சபரிமலை அய்யப்பன் கோவிலில் மீண்டும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
3. மீண்டும் காதல்? ஜோடியாக சுற்றும் ஓவியா-ஆரவ்
ஓவியாவும், ஆரவ்வும் மீண்டும் நெருக்கமாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
4. ஆணவ கொலை: நடிகை கஸ்தூரி கண்டனம்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடந்த ஆணவ கொலைக்கு, நடிகை கஸ்தூரி கண்டனம் தெரிவித்துள்ளார்.
5. உலக செஸ் போட்டி: கார்ல்சென் மீண்டும் ‘டிரா’
உலக செஸ் போட்டியில், கார்ல்சென் மீண்டும் டிரா செய்தார்.