சினிமா செய்திகள்

சந்தான பாரதி மகன் டைரக்டர் ஆகிறார் + "||" + Santhana Bharathi's son is the director

சந்தான பாரதி மகன் டைரக்டர் ஆகிறார்

சந்தான பாரதி மகன் டைரக்டர் ஆகிறார்
டைரக்டர்-நடிகர் சந்தான பாரதியின் மகன் சஞ்சய் பாரதி, ஸ்ரீகோகுலம் மூவீஸ் தயாரிக்கும் புதிய படத்தின் மூலம் டைரக்டர் ஆகிறார்.
மலையாளத்தில் மம்முட்டி நடித்த ‘பழசி ராஜா,’ திலீப்-சித்தார்த் நடித்த ‘கமர சம்பவம்,’ மோகன்லால்-நிவின் பாலி நடித்த ‘காயன் குளம் கொச்சுன்னி,’ கமல்ஹாசன் நடித்த ‘தூங்காவனம் ஆகிய படங்களை தயாரித்த கோகுலம் கோபாலன், இந்த படத்தை தயாரிக்கிறார்.

கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில், பல்வேறு இளம் டைரக்டர்களை அறிமுகம் செய்தவர், இவர். அடுத்து இவர், காதல்-அதிரடி சண்டை காட்சிகள் நிறைந்த ஒரு படத்தை தயாரிக்கிறார்.

டைரக்டர் விஜய்யிடம் பல படங்களில் உதவி டைரக்டராக பணிபுரிந்த சஞ்சய் பாரதி இயக்குகிறார்.

பிப்ரவரி மாதம் இறுதியில் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது.”