சினிமா செய்திகள்

பாரதிராஜா-சசிகுமார்-சுசீந்திரனுடன்தமிழ் புத்தாண்டுக்கு ‘கென்னடி கிளப்’ + "||" + Kennedy Club for Tamil New Year

பாரதிராஜா-சசிகுமார்-சுசீந்திரனுடன்தமிழ் புத்தாண்டுக்கு ‘கென்னடி கிளப்’

பாரதிராஜா-சசிகுமார்-சுசீந்திரனுடன்தமிழ் புத்தாண்டுக்கு ‘கென்னடி கிளப்’
பாரதிராஜா, சசிகுமார், சுசீந்திரன் கூட்டணியில், ‘கென்னடி கிளப்’ என்ற புதிய படம் தயாராகி இருக்கிறது.
கென்னடி கிளப் பெண்கள் கபடியை கருவாக கொண்ட படம், இது.  சமுத்திரக்கனி, சூரி, முனீஸ்காந்த், காயத்ரி மற்றும் புதுமுகங்கள் மீனாட்சி, நீது, சவும்யா, ஸ்ம்ர்தி, சவுந்தர்யா மற்றும் பலரும் நடித்து வருகிறார்கள். டி.இமான் இசையமைக்கிறார். சுசீந்திரன் டைரக்டு செய்கிறார். படத்தை பற்றி அவர் கூறுகிறார்:-

‘‘பெண்கள் கபடியை மையமாக கொண்ட கதை, இது. இந்தியா முழுவதும் எங்கெல்லாம் கபடி போட்டி நடைபெற்றதோ அங்கெல்லாம் சென்று நிஜ போட்டிகளை படமாக்கி இருக்கிறோம். சேலம், ஈரோடு, கோவை, மதுரை, கன்னியாகுமரி, மும்பை, அகமதாபாத் ஆகிய இடங்களில் படப்பிடிப்பை நடத்தினோம்.

பெரும்பாலான காட்சிகளை 4 கேமராக்கள் மூலம் படமாக்கி இருக்கிறோம். இறுதி கட்ட படப்பிடிப்புக்காக மகாராஷ்டிரா சென்றோம். அங்கிருந்து சுமார் 180 கிலோ மீட்டர் தொலைவில் இசாத்பூர் என்ற இடத்தில் படப்பிடிப்பை நடத்தி வருகிறோம். ஹரியானாவில் நடைபெற இருக்கும் நிஜ போட்டியையும் படமாக்க திட்டமிட்டு இருக்கிறோம்.

சீன மொழிக்கான டப்பிங் உரிமை (ரூ.2 கோடிக்கு) படம் வெளியாவதற்கு முன்பே விற்பனை ஆகியிருக்கிறது. இறுதிக்கட்டத்தில் உள்ள இந்த படம் தமிழ் புத்தாண்டுக்கு திரைக்கு வரும்.’’