சினிமா செய்திகள்

சின்னத்திரை'யில் இருந்து வெள்ளித்திரைக்கு...! + "||" + Tv to theatre

சின்னத்திரை'யில் இருந்து வெள்ளித்திரைக்கு...!

சின்னத்திரை'யில் இருந்து வெள்ளித்திரைக்கு...!
`சின்னத்திரை'யில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து புகழ் பெற்றவர்கள் பலர் உண்டு.
இந்தி நடிகர் ஷாருக்கான், மாதவன், சிவகார்த்திகேயன் தொடங்கி, பிரியா பவானி சங்கர் வரை இந்த பட்டியல் நீளும். இந்த வரிசையில் சமீபத்தில் இணைந்திருப்பவர், திவ்யா கணேஷ். தமிழ் பெண்ணான இவர், ராமநாதபுரத்தை சேர்ந்தவர். ஏராளமான தொலைக்காட்சி தொடர்களில் நடித்து இருக்கிறார்.

இவர் இப்போது, ஒரு மலையாள படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். அதில், மோகன்லாலின் அண்ணன் மகன் கதாநாயகனாக நடிக்கிறார். மதுசூதனன் டைரக்டு செய்கிறார். அந்த படத்தில், திவ்யா கணேஷ் தாழ்வுமனப்பான்மையும், சந்தேகப்புத்தியும் கொண்ட பெண்ணாக நடிக்கிறார். இதேபோல் இவர், ஒரு தமிழ் படத்திலும், ஒரு தெலுங்கு படத்திலும் கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்.

அதிக தமிழ் படங்களில் கதாநாயகியாக நடிக்க வேண்டும் என்பது இவருடைய கனவு.