சினிமா செய்திகள்

‘அசுரகுரு’ படத்தில் விக்ரம் பிரபுவின் 2 முகங்கள் + "||" + 2 faces of Vikram Prabhu in asura guru

‘அசுரகுரு’ படத்தில் விக்ரம் பிரபுவின் 2 முகங்கள்

‘அசுரகுரு’ படத்தில் விக்ரம் பிரபுவின் 2 முகங்கள்
விக்ரம் பிரபு கதாநாயகனாக நடித்து அடுத்து திரைக்கு வரயிருக்கும் படம், ‘அசுர குரு.’
‘‘அசுர குரு,  படத்தை பற்றி அதன் டைரக்டர் ஏ.ராஜ்தீப் கூறியதாவது:-

‘‘அசுர குரு, அதிரடி சண்டை காட்சிகள் நிறைந்த ‘திரில்லர்’ படம். கதாநாயகன் விக்ரம் பிரபு, கொரியர் ஆபீசில் வேலை செய்கிறார். அவருக்கு இன்னொரு முகம் இருக்கிறது. அது, அசுரத்தனமான சுபாவம். அவருக்கு சின்ன வயதில் ஏற்பட்ட ஒரு பாதிப்பு இருக்கிறது. அது, சமூகத்தில் நடக்கும் குற்றங்களை பார்த்து ஆக்ரோஷம் அடைகிறது. அது என்ன பாதிப்பை ஏற்படுத்துகிறது? என்பதை திகில் பட பாணியில் சொல்லி இருக்கிறோம்.

கதாநாயகி மகிமா நம்பியார், துப்பறியும் அலுவலகத்தில் வேலை செய்யும் துணிச்சல் மிகுந்த பெண்ணாக வருகிறார். ஒரு குற்றம் காரணமாக விக்ரம் பிரபுவை தேடுகிறார். அவரால் கண்டுபிடிக்க முடிந்ததா, இல்லையா? என்பது கதை.

இதில், தெலுங்கு நடிகர்கள் சுப்புராஜ், நாகிநீடு ஆகிய இருவரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். யோகி பாபு, ஜெகன் இருவரும் நகைச்சுவை பாத்திரங்களில் வருகிறார்கள். யோகி பாபு, டீக்கடைக்காரராக நடித்து இருக்கிறார். மனோபாலா, குமரவேல் ஆகியோரும் இருக்கிறார்கள்.

கணேஷ் ராகவேந்திரா இசையமைத்து இருக்கிறார். ஜே.பி.எஸ்.சதீஷ் தயாரிக்கிறார். சென்னை, உடுமலைப்பேட்டை, ஐதராபாத் ஆகிய இடங்களில் படம் வளர்ந்து இருக்கிறது.’’