சினிமா செய்திகள்

நானா படேகர் மீது புகார்: “பழி வாங்க மீ டூ பயன்பட்டது” -நடிகை தனுஸ்ரீ தத்தா + "||" + Complaint against Nana Patekar Take revenge METOO is used Actress Tanushree Datta

நானா படேகர் மீது புகார்: “பழி வாங்க மீ டூ பயன்பட்டது” -நடிகை தனுஸ்ரீ தத்தா

நானா படேகர் மீது புகார்: “பழி வாங்க மீ டூ பயன்பட்டது” -நடிகை தனுஸ்ரீ தத்தா
இந்தி பட உலகில் ‘மீ டூ’ இயக்கத்தை ஆரம்பித்து வைத்தவர் தனுஸ்ரீ தத்தா. இவர் தமிழில் தீராத விளையாட்டு பிள்ளை படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.
இவர், “படப்பிடிப்பில் நடிகர் நானா படேகர் உடலில் தகாத இடங்களில் கைவைத்து பாலியல் தொல்லை கொடுத்ததாக பரபரப்பு புகார் கூறி இருந்தார். போலீசிலும் புகார் அளித்தார்.

அதன்பிறகுதான் நடிகைகள், பெண் இயக்குனர்கள் பலர் மீ டூ வில் தங்களுக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல்களை சொல்ல தொடங்கினார்கள். மீ டூ வை ஆரம்பித்து வைத்ததாக தன்னை பாராட்டுவதற்கு தனுஸ்ரீ தத்தா பதில் அளித்து கூறியதாவது:-


“மீ டூ இயக்கம் இந்தியாவில் ஆரம்பிக்க நான்தான் காரணம் என்று பேசுகிறார்கள். இதற்கான பெருமையை நான் எடுத்துக்கொள்ள விரும்பவில்லை. ஒரு சாதாரண பெண்ணாகத்தான் எனக்கு நேர்ந்த தொல்லைகளை வெளிப்படுத்தினேன். ஒரு கதாநாயகி என்பதால் பெரிதுபடுத்தினர். மீ டூ இயக்கத்தை நான் ஆரம்பிக்கவில்லை. மீ டூ விழிப்புணர்வுக்கு ஒரு கருவியாக இருந்து இருக்கிறேன். பல வருடங்களுக்கு முன்பு சினிமாவில் நடித்தபோது எனக்கு நேர்ந்த கொடுமைக்கு பழிவாங்க வேண்டும் என்று விரும்பினேன். அதற்கு மீ டு இயக்கம் உதவியது. மீ டூ தனிப்பட்ட மனிதர்களை சார்ந்தது இல்லை. நேரம் வரும்போது எல்லாம் தானாக வெளிப்படும்.” இவ்வாறு தனுஸ்ரீ தத்தா கூறினார்.