சினிமா செய்திகள்

திகில் படத்தில் அருள்நிதி தோற்றம் + "||" + Arulnidhi Appearance in horror movie

திகில் படத்தில் அருள்நிதி தோற்றம்

திகில் படத்தில் அருள்நிதி தோற்றம்
திகில் படத்தில் நடிகர் அருள்நிதியின் தோற்றம் வெளியாகி உள்ளது.

வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடிக்கிறார் அருள்நிதி. அவர் நடித்த மவுனகுரு படம் பெரிய வரவேற்பை பெற்றது. இந்த படத்தை இந்தியிலும் ரீமேக் செய்தனர். டிமான்டி காலனி என்ற பேய் படத்தில் நடித்து இருந்தார். இதுவும் பயங்கர திகில் படமாக ரசிகர்களை கவர்ந்தது. வசூலும் அள்ளியது.

பாண்டிராஜ் இயக்கிய வம்சம் படமும் முக்கிய படமாக அமைந்தது. நாலு போலீசும் நல்லா இருந்த ஊரும், ஆறாது சினம், பிருந்தாவனம், இரவுக்கு ஆயிரம் கண்கள் உள்பட மேலும் வித்தியாசமான படங்களில் நடித்தார். அடுத்து அவர் நடிக்கும் புதிய படத்துக்கு கே-13 என்று பெயர் வைத்துள்ளனர். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடக்கிறது.

இதில் அருள்நிதி ஜோடியாக ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடித்துள்ளார். பரத் நீலகண்டன் டைரக்டு செய்கிறார். இந்த படத்தில் அருள்நிதியின் முதல் தோற்றத்தை படக்குழுவினர் வெளியிட்டு உள்ளனர். இதில் கே-13 என்ற பெயரை வித்தியாசமாக வடிவமைத்துள்ளனர். போஸ்டரில் அருள்நிதி இருக்கையில் அமர்ந்து இருக்கிறார். அவரை இருக்கையோடு சுற்றி கட்டி வைத்து உள்ளனர்.

இந்த தோற்றத்தில் பயங்கர திகில் படத்துக்கான அறிகுறிகள் தெரிகின்றன. படத்தை அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக்கி வருகிறார்கள்.