சினிமா செய்திகள்

சபரிமலை விவகாரம்: நடிகை கே.ஆர்.விஜயா பதில் + "||" + Actress K.R.Vijaya New information

சபரிமலை விவகாரம்: நடிகை கே.ஆர்.விஜயா பதில்

சபரிமலை விவகாரம்: நடிகை கே.ஆர்.விஜயா பதில்
சபரிமலை விவகாரம் தொடர்பாக நடிகை கே.ஆர்.விஜயா பதில் அளித்துள்ளார்.
சென்னை,

சபரிமலை அய்யப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களுக்கும் அனுமதி அளித்து சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்தது. இதற்கு இந்து அமைப்புகள் மற்றும் பா.ஜனதா போன்ற கட்சிகள் பலத்த எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடத்தி வந்தன. இதனால் சபரிமலையில் தடை செய்யப்பட்ட வயதுடைய பெண்களால் செல்ல முடியவில்லை. ஆனால் கடந்த சில தினங்களுக்கு முன், அதிகாலையில் கேரளாவை சேர்ந்த கனகதுர்கா (வயது 44), பிந்து (42) என்ற 2 பெண்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சபரிமலையில் சாமி தரிசனம் செய்தனர். இதனால் கோவில் நடை அடைக்கப்பட்டு பரிகார பூஜைகள் செய்யப்பட்டன.

சபரிமலையில் பெண்கள் நுழைந்த விவகாரம் இந்து அமைப்புகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.  குறிப்பாக கேரளாவை சேர்ந்த இந்து அமைப்புகளும், பா.ஜனதாவினரும் கடும் கொந்தளிப்பில் உள்ளனர். இதனால்  கடந்த சில தினங்களுக்கு முன்  மாநிலம் முழுவதும் போராட்டங்களும், வன்முறைகளும் அரங்கேறின.

இந்நிலையில் இது தொடர்பாக நடிகை கே.ஆர்.விஜயா கூறியிருப்பதாவது:

சபரிமலை விவகாரத்தில் முன்னோர்கள் கூறியதைத் தான் கடைபிடிக்க வேண்டும். தற்போதைய சினிமா தொழில்நுட்பத்தில் நல்ல வளர்ச்சி அடைந்துள்ளது என்றார்.