சினிமா செய்திகள்

சினிமா ஸ்டண்ட் யூனியன் தேர்தலில் சுப்ரீம் சுந்தர் மீண்டும் தலைவராக தேர்வு + "||" + In Cinema stunts Union elections Supreme Sundar has been chosen as the leader again

சினிமா ஸ்டண்ட் யூனியன் தேர்தலில் சுப்ரீம் சுந்தர் மீண்டும் தலைவராக தேர்வு

சினிமா ஸ்டண்ட் யூனியன் தேர்தலில் சுப்ரீம் சுந்தர் மீண்டும் தலைவராக தேர்வு
சினிமா ஸ்டண்ட் யூனியன் தேர்தலில், சுப்ரீம் சுந்தரே மீண்டும் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

தென்னிந்திய திரைப்பட சினி மற்றும் டி.வி. ஸ்டண்ட் இயக்குனர்கள், ஸ்டண்ட் நடிகர்கள் யூனியன், 1966-ம் ஆண்டில் எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்டது. இந்த யூனியன் தேர்தல் சமீபத்தில் நடந்தது. கடந்த முறை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட எஸ்.டி.சுப்ரீம் சுந்தரே மீண்டும் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

உப தலைவராக தவசிராஜ், துணைத்தலைவராக கே.ராஜசேகர், செயலாளராக ஜி.பொன்னுசாமி, துணைச்செயலாளராக வி.மணிகண்டன், இணைச்செயலாளராக எஸ்.எஸ்.எம்.சுரேஷ், பொருளாளராக சி.பி.ஜான் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.

செயற்குழு உறுப்பினர்களாக 12 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.