சினிமா செய்திகள்

ரஜினிக்கு ஜோடியாகும் வாய்ப்பை தவற விட்டவர்! + "||" + Rajini is pairing up Missed opportunity!

ரஜினிக்கு ஜோடியாகும் வாய்ப்பை தவற விட்டவர்!

ரஜினிக்கு ஜோடியாகும் வாய்ப்பை தவற விட்டவர்!
ரஜினிக்கு ஜோடியாகும் வாய்ப்பை தவற விட்ட நடிகை குறித்து தகவல் வெளியாகி உள்ளது.

சூர்யா, விக்னேஷ் சிவன் கூட்டணியில் வெளியான ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தில், கலையரசனுக்கு ஜோடியாக நடித்தவர், மீரா மிதுன். ‘கிரகணம்,’ ‘8 தோட்டாக்கள்’ ஆகிய படங்களிலும் நடித்து இருக்கிறார். இவர், சென்னையை சேர்ந்த தமிழ் பெண் என்பது ஒரு கூடுதல் தகுதி.

கோ-ஆப் டெக்ஸ் விளம்பரத்தில் ஆரம்பித்து, படிப்படியாக வளர்ந்த ‘மாடல்’ அழகி இவர். சமீபத்தில் ஒரு நகைக்கடை விளம்பரத்துக்காக கவர்ச்சியாக ‘போஸ்’ கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தினார். ரஜினிகாந்த் நடித்துள்ள ‘பேட்ட’ படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பை நூலிழையில் தவற விட்டார். இவருக்கு பதிலாக அந்த கதாபாத்திரத்தில் நடித்தவர், திரிஷா.

“விக்ரம் நடிக்கும் ‘கடாரம் கொண்டான்’ படத்திலும் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருந்தேன். அதுவும் சில காரணங்களால் கடைசி நேரத்தில் விலகிப் போய்விட்டது. விலகிப்போன வாய்ப்புகளை விரைவில் பிடிப்பேன்” என்கிறார், மீரா மிதுன்!