சினிமா செய்திகள்

கங்கனா ரணாவத் நடிப்பில் தமிழில் ராணி லட்சுமிபாய் படம் + "||" + Kangana Ranawat acting Rani Lakshmibai Film in Tamil

கங்கனா ரணாவத் நடிப்பில் தமிழில் ராணி லட்சுமிபாய் படம்

கங்கனா ரணாவத் நடிப்பில் தமிழில் ராணி லட்சுமிபாய் படம்
கங்கனா ரணாவத் நடிப்பில் தமிழில் ராணி லட்சுமிபாய் என்கிற திரைப்படம் வெளியாக உள்ளது.

தமிழில் ‘தாம்தூம்’ படத்தில் கதாநாயகியாக நடித்தவர் கங்கனா ரணாவத். இந்தியில் முன்னணி நடிகையாக இருக்கிறார். குயின் படத்தில் நடித்து சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்றார். தற்போது ஜான்சி ராணி லட்சுமிபாயின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து தயாராகி உள்ள மணிகர்னிகா படத்தில் லட்சுமிபாயாக நடித்துள்ளார். ரூ.120 கோடி பட்ஜெட்டில் தயாராகி உள்ளது.

இந்த படம் தமிழ், இந்தி, தெலுங்கு ஆகிய 3 மொழிகளில் வெளியாகிறது. இதன் தமிழ் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இதில் கங்கனா ரணாவத் கலந்து கொண்டு பேசியதாவது:-

“மணிகர்னிகா தேச பற்று மிக்க கதையம்சம் உள்ள படம். இதுமாதிரி ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஏக்கம் பல வருடங்களாக எனக்கு இருந்தது. இந்தியாவின் திறமையான நடிகர்கள் பலர் என்னுடன் இணைந்து நடித்துள்ளனர்.

இதன் படப்பிடிப்பு தொடங்கியபோது 50 கிலோ உடல் எடை இருந்தேன். அதிரடி சண்டை காட்சிகளில் நடிக்கும்போது மிகவும் கஷ்டப்பட்டேன்.

தினமும் 10 முதல் 12 மணிநேரம் சண்டை காட்சிகளில் நடித்தேன். சில காட்சிகளை நான் இயக்கினேன். அது சவாலாக இருந்தது. ராணி லட்சுமிபாய் கதாபாத்திரம் சாதாரணமானது இல்லை. அதற்காக நிறைய அர்ப்பணிப்பை கொடுத்தேன். இந்த படம் அனைத்து மொழி மக்களையும் சென்றடையும் என்ற நம்பிக்கை உள்ளது.” இவ்வாறு அவர் கூறினார்.


தொடர்புடைய செய்திகள்

1. சூர்யா நடிப்பில் 4 படங்கள்
சூர்யா நடிப்பில் 4 புதிய படங்கள் உருவாகி வருகின்றன.
2. தேர்வாணைய வினாத்தாள் தமிழிலும் தயாரிக்கப்பட வேண்டும்: ‘‘டாக்டர் ராமதாஸ் கருத்தை வழிமொழிகிறேன்’’ - கவிஞர் வைரமுத்து டுவிட்டர் பதிவு
தேர்வாணைய வினாத்தாள் தமிழிலும் தயாரிக்கப்பட வேண்டும் என்ற டாக்டர் ராமதாஸ் கருத்தை வழிமொழிகிறேன் என கவிஞர் வைரமுத்து, தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.