சினிமா செய்திகள்

நடிகை சாயிஷாவுடன் ஆர்யா காதல்? + "||" + Arya's love with actress Saiisha?

நடிகை சாயிஷாவுடன் ஆர்யா காதல்?

நடிகை சாயிஷாவுடன் ஆர்யா காதல்?
நடிகை சாயிஷாவுக்கும் ஆர்யாவுக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளதா என தகவல் வெளியாகி உள்ளது.

தமிழில் முன்னணி கதாநாயகனாக இருப்பவர் ஆர்யா. 2005-ல் அறிந்தும் அறியாமலும் படத்தில் அறிமுகமானார். பட்டியல், நான் கடவுள், மதராச பட்டணம், வேட்டை, ராஜா ராணி, இரண்டாம் உலகம், கடம்பன், கஜினிகாந்த் என்று பல முக்கிய படங்களில் நடித்துள்ளார். ஆர்யாவுக்கு 38 வயது ஆகிறது.

கடந்த வருடம் டெலிவிஷனில் ஒளிபரப்பான எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் அவருக்கு மணப்பெண் தேடல் நடந்தது. இதில் 16 பெண்கள் பங்கேற்றனர். இறுதி போட்டிக்கு 3 பெண்கள் வந்தார்கள். அவர்களில் ஒருவரை மணப்பெண்ணாக தேர்வு செய்வார் என்று எதிர்பார்த்த நிலையில் யாரையும் திருமணம் செய்யாமல் விலகி விட்டார். ஒருவரை மணந்தால் மற்ற இருபெண்கள் மனது புண்படும் என்று காரணம் சொன்னார். அதன்பிறகு தொடர்ந்து படங்களில் நடித்தார்.

இந்த நிலையில் ஆர்யாவுக்கும் நடிகை சாயிஷாவுக்கும் காதல் மலர்ந்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவி உள்ளது. சாயிஷா தமிழில் வனமகன், கடைக்குட்டி சிங்கம், ஜூங்கா, கஜினிகாந்த் ஆகிய படங்களில் நடித்துள்ளார். கஜினிகாந்த் படத்தில் ஆர்யா ஜோடியாக நடித்தபோது இருவருக்கும் காதல் மலர்ந்ததாக கிசுகிசுக்கின்றனர்.

இருவரும் ரகசியமாக சந்தித்து காதலை வளர்ப்பதாகவும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளதாகவும் தகவல் பரவி உள்ளது. இதனை ஆர்யா உறுதிப்படுத்தவில்லை.


தொடர்புடைய செய்திகள்

1. பூந்தமல்லியில் திருமணம் செய்ய மறுத்த காதலன் வீட்டு முன் இளம்பெண் தர்ணா
காதலித்துவிட்டு திருமணம் செய்ய மறுத்த காதலன் வீட்டு முன் இளம்பெண் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
2. காதலித்து கர்ப்பிணியாக்கி விட்டு திருமணத்துக்கு மறுத்த தொழிலாளி கொலை மிரட்டல் விடுத்ததாக வழக்கு
காதலித்து கர்ப்பிணியாக்கி விட்டு திருமணத்துக்கு மறுத்த தொழிலாளி உள்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
3. ஜோடியாக திரிகின்றனர்: உறுதியான பிரபாஸ்-அனுஷ்கா காதல்?
ஜோடியாக சுற்றி வருவதால், பிரபாஸ்-அனுஷ்கா காதல் உறுதியாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
4. திருமணமான 20 நாளில் காதல் மனைவி பிரிந்து சென்றதால் லாரி டிரைவர் தற்கொலை
திருமணமான 20 நாளில் காதல் மனைவி பிரிந்து சென்றதால் லாரி டிரைவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
5. தேவை ஒரு மறுமலர்ச்சி
ஆண்களால் பெண்களுக்கு நிகழும் கொடுமைகளும், பெண்களால் ஆண்கள் அனுபவிக்கும் கொடுமைகளும் அங்கொன்றும், இங்கொன்றுமாய் எப்போதோ ஒரு முறை நடந்து கொண்டிருந்த கொடுஞ் செயல்கள் நாளுக்கொன்றாய் மாறி இப்போது தினத்துக்குப் பலவாய் பெருகிக் கொண்டிருக்கிறது.