சினிமா செய்திகள்

இளையராஜாவை விமர்சிப்பதா?கங்கை அமரனுக்கு எதிர்ப்பு + "||" + Resistance to Gangai Amaran

இளையராஜாவை விமர்சிப்பதா?கங்கை அமரனுக்கு எதிர்ப்பு

இளையராஜாவை விமர்சிப்பதா?கங்கை அமரனுக்கு எதிர்ப்பு
சமூக வலைத்தளத்தில் இளையராஜாவை விமர்சிப்பதுபோல் பதிவிட்டிருப்பதாக கங்கை அமரனுக்கு எதிர்ப்புகள் கிளம்பி உள்ளது.
இசையமைப்பாளர் இளையராஜா சமீபத்தில் சென்னையில் நடந்த விழா ஒன்றில் மாணவிகளுடன் கலந்துரையாடி இசை அனுபவங்களை பகிர்ந்தார். அவர் கூறும்போது, ‘‘இன்றைய சூழலில் இசையமைப்பாளர்களே இல்லை. படத்தின் சூழலுக்கு ஏற்ப எனக்கு இசையமைக்க வரும். இப்போது சி.டியோடு வருகிறார்கள். அந்த காலத்தில் நாங்கள் கம்போஸ் செய்ய வேண்டும், வாசிக்க வேண்டும். ஒவ்வொரு ஸ்வரமும் அமைத்து அதை இயக்குனர் ஓகே. செய்து அதன்பிறகுதான் கவிஞரை கூப்பிட்டு பாட்டு எழுத வைப்போம்’’ என்றார். 

இளையராஜாவின் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அவருக்கு ஆதரவாகவும் எதிராகவும் சமூக வலைத்தளங்களில் கருத்துக்கள் பதிவாகின்றன. இசையமைப்பாளரும் இளையராஜாவின் சகோதரருமான கங்கை அமரன் தனது டுவிட்டர் பக்கத்தில் இளையராஜா தெரிவித்ததை அப்படியே பதிவிட்டு தன்னுடைய பதிவாக, ‘‘மன்னிக்கவும் நானெல்லாம் மறுபடியும் இசையமைக்க வரமுடியாது’’ என்று குறிப்பிட்டுள்ளார். 

இளையராஜாவை விமர்சிப்பதுபோல் அந்த பதிவு இருப்பதாக கங்கை அமரனுக்கு எதிர்ப்புகள் கிளம்பி உள்ளன. சமூக வலைத்தளத்தில் பலர் அவரை கண்டித்து வருகிறார்கள். ‘‘மன்னிக்கவும் நீங்கள் எப்போதுமே உங்கள் அண்ணன் பேச்சை கேட்பது இல்லை’’ என்று ஒருவர் குற்றம் சாட்டி உள்ளார். 

இன்னொருவர், ‘‘என்னென்ன தேவைகள் அண்ணனை கேளுங்கள்–கங்கை அமரன் சார் இளையராஜாவுக்கு சுட்டி காட்டினார். நெல்லின் விதை போடாமல் நெல்லும் வருமா வேர்வை அது சிந்தாமல் வெள்ளிப்பணமா–இளையராஜா சார் கங்கை அமரனுக்கு சுட்டி காட்டினார். இந்நிகழ்வு உண்மையா சார்’ என்று கேட்க, கங்கை அமரன் ஆமாம் என்று பதில் அளித்தார். இந்த சர்ச்சை பெரும் விவாதமாக மாறி இருக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

1. பொள்ளாச்சி விவகாரத்தில் மக்களின் எண்ணம் தான் என்னுடைய எண்ணம் - இளையராஜா
பொள்ளாச்சி விவகாரத்தில் மக்களின் எண்ணம் தான் என்னுடைய எண்ணம் என்று இசையமைப்பாளர் இளையராஜா தெரிவித்துள்ளார்.
2. “இளையராஜாவின் கோபத்தை பெரிதாக கருதவில்லை” - நடிகை ரோகிணி விளக்கம்
இளையராஜாவின் கோபத்தை பெரிதாக கருதவில்லை என நடிகை ரோகிணி விளக்கம் அளித்துள்ளார்.
3. ‘இளையராஜாவின் இசை வாழ்ந்துகொண்டே இருக்கும்’ பாராட்டு விழாவில் கவர்னர் புகழாரம்
இளையராஜாவின் இசை எப்போதும் வாழ்ந்துகொண்டே இருக்கும் என்று சென்னையில் நடந்த விழாவில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் புகழாரம் சூட்டினார்.
4. 'இளையராஜா 75' விழாவை ஏன் ஒத்தி வைக்க கூடாது? உயர் நீதிமன்றம் கேள்வி
'இளையராஜா 75' விழாவை ஏன் ஒத்தி வைக்க கூடாது என தயாரிப்பாளர் சங்கத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
5. ‘கெட்ட எண்ணங்களை மாற்றக்கூடிய சக்தி இசைக்கு மட்டுமே உள்ளது’ சிதம்பரம் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற விழாவில் இளையராஜா பேச்சு
கெட்ட எண்ணங்களை மாற்றக்கூடிய சக்தி இசைக்கு மட்டுமே உள்ளது என்று சிதம்பரம் அண்ணாமலை பல் கலைக்கழகத்தில் நடைபெற்ற விழாவில் இளையராஜா கூறினார்.