போதைப் பொருள் கொடுத்து பாலியல் பலாத்காரம்: நடிகர் அலோக்நாத்துக்கு முன் ஜாமீன்


போதைப் பொருள் கொடுத்து பாலியல் பலாத்காரம்: நடிகர் அலோக்நாத்துக்கு முன் ஜாமீன்
x
தினத்தந்தி 7 Jan 2019 10:45 PM GMT (Updated: 7 Jan 2019 5:39 PM GMT)

பாலியல் பலாத்கார வழக்கில் நடிகர் அலோக்நாத்துக்கு முன் ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.

பிரபல இந்தி நடிகர் அலோக்நாத் மீது பெண் தயாரிப்பாளரும் கதாசிரியருமான வின்டா நந்தா ‘மீ டூ’வில் பாலியல் புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். 19 ஆண்டுகளுக்கு முன்பு அலோக் நாத் விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றபோது மதுவில் போதைப் பொருள் கலந்து கொடுத்து தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக அவர் குற்றம் சாட்டினார். 

அந்த சம்பவத்தை வெளியே சொல்லாமல் மறந்து விடும்படி அறிவுரை வழங்கினார் என்றும் தெரிவித்தார். அதன்பிறகு  அவருடையை வீட்டுக்கு தன்னை வரவழைத்து மீண்டும் பாலியல் வன்கொடுமை செய்தார் என்றும் கூறினார். அலோக்நாத் போன்றவர்களால் பாதிக்கப்பட்ட பெண்கள் தங்களுக்கு நேர்ந்த கொடுமைகளை வெளியில் சொல்ல வேண்டும் என்றும் வற்புறுத்தினார். 

அலோக்நாத் மீது மும்பை போலீசிலும் புகார் செய்தார்.  இதைத்தொடர்ந்து மும்பை ஓஷிவாரா போலீஸ் நிலையத்தில் அலோக்நாத் மீது கற்பழிப்பு வழக்குப்பதிவு செய்தனர். இதனால் அவர் கைது செய்யப்படலாம் என்ற பரபரப்பு நிலவியது. 

இதைத்தொடர்ந்து மும்பை செசன்ஸ் கோர்ட்டில் முன் ஜாமீன் கோரி அலோக்நாத் மனுதாக்கல் செய்தார். இந்த மனு மீது நடந்த விசாரணையில் அலோக்நாத்துக்கு முன் ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார். பாலியல் புகாரை தொடர்ந்து மும்பையில் உள்ள சினிமா மற்றும் தொலைக்காட்சி கலைஞர்கள் சங்கமும் நடிகர் அலோக்நாத்துக்கு நோட்டீசு அனுப்பி நடவடிக்கை எடுத்துள்ளது.

Next Story