சினிமா செய்திகள்

ஜோடியாக தென்கொரிய நடிகை?கமலின் இந்தியன்-2 பட வேலைகள் தீவிரம் + "||" + Kamal Indian-2 film

ஜோடியாக தென்கொரிய நடிகை?கமலின் இந்தியன்-2 பட வேலைகள் தீவிரம்

ஜோடியாக தென்கொரிய நடிகை?கமலின் இந்தியன்-2 பட வேலைகள் தீவிரம்
கமலின் இந்தியன்-2 பட வேலைகள் தற்போது தீவிரமாகி உள்ளன.
கமல்ஹாசன் நடித்து 1996-ல் வெளியாகி வசூல் குவித்த இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் இந்தியன்-2 என்ற பெயரில் தயாராகிறது. இதில் கமல்ஹாசன் வயதானவராகவும் இளமையாகவும் இரு வேடங்களில் நடிக்கிறார். ஷங்கர் டைரக்டு செய்கிறார். இதன் படப்பிடிப்பை கடந்த மாதம் தொடங்க திட்டமிட்டு திடீரென்று தள்ளி வைத்தனர்.

தற்போது பட வேலைகள் தீவிரமாகி உள்ளன. இதில் கமல்ஹாசனுக்கு 2 கதாநாயகிகள் ஜோடிகளாக நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே காஜல் அகர்வால் கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளார். இந்த படத்துக்காக அவர் வர்ம கலைகள் கற்று வருகிறார். இன்னொரு கதாநாயகியாக நடிக்க தென்கொரிய நடிகை பே சூஸியிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.

இந்தியன் படத்தின் முதல் பாகத்தின் இறுதி காட்சி வெளிநாட்டில் முடிவடையும். இரண்டாம் பாகத்தில் தைவானில் கதை தொடங்கி இந்தியாவுக்கு வருவதுபோல் ஷங்கர் திரைக்கதை அமைத்து இருப்பதாக கூறப்படுகிறது. தைவானில் நடக்கும் காட்சிகளில் கமல்ஹாசனுடன் தென்கொரிய நடிகை பே சூஸியை நடிக்க வைக்க ஷங்கர் முடிவு செய்துள்ளார்.

பொங்கல் முடிந்ததும் இந்தியன்-2 படப்பிடிப்பு தொடங்குகிறது. சென்னையிலும் பொள்ளாச்சியிலும் படப்பிடிப்பை நடத்துகின்றனர். இதற்காக பொள்ளாச்சியில் அரங்கு அமைத்து உள்ளனர். கமல்ஹாசன் சில வாரங்கள் பொள்ளாச்சி பகுதியில் முகாமிட்டு படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார்.