சினிமா செய்திகள்

பாலியல் வழக்கில் பாலிவுட் நடிகருக்கு ஜாமீன் ”சொந்த நன்மைக்காக நடிகர் மீது குற்றம் சாட்டப்பட்டு உள்ளது” + "||" + Alok Nath granted bail in rape case; court says ‘Vinta Nanda accused actor for her own benefit’

பாலியல் வழக்கில் பாலிவுட் நடிகருக்கு ஜாமீன் ”சொந்த நன்மைக்காக நடிகர் மீது குற்றம் சாட்டப்பட்டு உள்ளது”

பாலியல் வழக்கில் பாலிவுட் நடிகருக்கு ஜாமீன் ”சொந்த நன்மைக்காக நடிகர் மீது குற்றம் சாட்டப்பட்டு உள்ளது”
பாலியல் வழக்கில் பாலிவுட் நடிகருக்கு ஜாமீன் விண்டா நந்தா தனது சொந்த நன்மைக்காக நடிகர் மீது குற்றம் சாட்டினார் என நீதிமன்றம் கூறி உள்ளது.
மும்பை

இந்தி நடிகர் அலோக் நாத் மீது இந்தி பட பெண் இயக்குனர் விண்டா நந்தா பாலியல் புகார் கூறினார்.  இதுகுறித்து கடந்த அக்டோபர் 8 ந்தேதி தனது முகநூல் பக்கத்தில்  “அலோக் நாத்துக்கு நான் தயாரித்த தாரா டி.வி. தொடரின் நாயகி மீது ஆசை ஏற்பட்டு பாலியல் தொல்லை கொடுத்தார். குடித்துவிட்டு படப்பிடிப்பு அரங்குக்குள் வந்து கதாநாயகி மீது விழுந்தார். அந்த நடிகை அவரை ஓங்கி அறைந்தார்’’ என்று கூறியிருந்தார்.

பின்னர் மும்பையில் உள்ள ஓஷிவாரா போலீசில் புகார் செய்தார். அதில்  1998 ல் அவரது வீட்டிலேயே  நாத் அவளை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக புகார் கூறினார். இதை தொடர்ந்து இந்திய தண்டனைச் சட்டத்தின் (IPC) பிரிவு 376 பிரிவின் கீழ் நவம்பர் மாதம்  அலோக் நாத் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரிய போது கடந்த வாரம் அலோக் நாத் சார்பில்   நீதிமன்றத்தில் ஆஜரான வக்கீல் விந்தா நந்தாவின் குற்றச்சாட்டு  "தீங்கிழைக்கும்" மற்றும் "பொய்யான" அறிக்கையின் அடிப்படையில் தாக்கல் செய்யப்பட்டது என கூறினார்.

இது ஒரு முன் விரோத அடிப்படையில் சொந்த காரணங்களுக்காக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு என  ரூ. 5 லட்சம் உறுதி  பத்திரத்தின் அடிப்படையில்  கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ் எஸ் ஓஸா  ஜாமீன் வழங்கினார்.

தொடர்புடைய செய்திகள்

1. பிரபல நடிகரிடம் ரூ.15 லட்சம் கேட்டனர் : மீ டூ வை வைத்து பணம் பறிக்க முயன்ற 2 நடிகைகள் கைது
நடிகைகள் ‘மீ டூ’வில் பிரபலங்கள் மீது பாலியல் புகார் சொல்லி திரையுலகை அதிரவைத்து வருகிறார்கள். நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் பலர் இதில் சிக்கி உள்ளனர்.
2. பெரம்பலூரில் பெண்களுக்கு பாலியல் கொடுமை என்று பொய்யான புகார் கொடுத்த வக்கீல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்
பெரம்பலூரில் பெண்களுக்கு பாலியல் கொடுமை என்று பொய்யான புகார் கொடுத்த வக்கீல் மீது நடவடிக்கை எடுக்க கோரி அ.தி.மு.க. மகளிரணியினர், வக்கீல்கள் நலச்சங்கத்தினர் போலீஸ் சூப்பிரண்டிடம் மனு கொடுத்தனர்.