சினிமா செய்திகள்

நடிகை சமந்தா கர்ப்பம்? + "||" + Actress Samantha pregnant?

நடிகை சமந்தா கர்ப்பம்?

நடிகை சமந்தா கர்ப்பம்?
நடிகை சமந்தா கர்ப்பமாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ், தெலுங்கில் சமந்தா முன்னணி நடிகையாக இருக்கிறார். 2010–ல் பாணா காத்தாடி படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். நான் ஈ, அஞ்சான், கத்தி, தெறி, மெர்சல், இரும்புத்திரை, யூ டர்ன் உள்ளிட்ட பல படங்கள் அவருக்கு முக்கிய படங்களாக அமைந்தன. 2017–ல் நாகசைதன்யாவை திருமணம் செய்துகொண்டார். நாக சைதன்யா தெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கிறார். 

இவர் பிரபல நடிகர் நாகார்ஜுனாவின் மகன். ஏ மாய சேசாயே தெலுங்கு படத்தில் நாகசைதன்யாவும், சமந்தாவும் ஜோடியாக நடித்தபோது காதல் வயப்பட்டு பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டனர். திருமணத்துக்கு பிறகும் சமந்தா படங்களில் நடித்து வருகிறார். கணவருடன் வெளிநாடுகளிலும் ஜோடியாக சுற்றி படங்களை டுவிட்டரில் பதிவிடுகிறார். 

இந்த நிலையில் சமந்தா கர்ப்பமாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. சமீபத்தில் அவர் சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட படத்தை பார்த்து நீங்கள் கர்ப்பமாக இருக்கிறீர்களா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள். அதற்கு சமந்தா பதில் சொல்லாமல் மவுனமாக இருக்கிறார். எனவே அவர் கர்ப்பமாக இருப்பது உறுதி என்று தெலுங்கு பட உலகினர் பேசுகிறார்கள். 

சமந்தா தற்போது தமிழில் விஜய் சேதுபதியுடன் சூப்பர் டீலக்ஸ் படத்தில் நடிக்கிறார். இது விரைவில் திரைக்கு வர உள்ளது. தெலுங்கில் 2 படங்கள் கைவசம் வைத்துள்ளார்.