சினிமா செய்திகள்

இன்று வெளியாகும் ‘பேட்ட’, ‘விஸ்வாசம்’ படங்கள் + "||" + Today is released Petta, Vishwamam films

இன்று வெளியாகும் ‘பேட்ட’, ‘விஸ்வாசம்’ படங்கள்

இன்று வெளியாகும் ‘பேட்ட’,  ‘விஸ்வாசம்’  படங்கள்
ரஜினிகாந்தின் பேட்ட, அஜித்குமாரின் விஸ்வாசம் ஆகிய 2 படங்கள் இன்று வெளியாவது ரசிகர்களுக்கு பெரிய பொங்கல் விருந்தாக அமைந்துள்ளது.
தமிழகத்தில் மொத்தம் உள்ள 1090 தியேட்டர்களையும் இந்த படங்கள் ஆக்கிரமித்து உள்ளன. அனைத்து தியேட்டர்களும் 2 நடிகர்களின் ரசிகர்களாலும் கொடி, தோரணம், கட் அவுட்கள் என்று களை கட்டி உள்ளன. பட்டாசுகளையும் வாங்கி குவித்துள்ளார்கள். 

வெளிநாடுகளிலும் அதிக திரையரங்குகளில் 2 படங்களும் வெளியாகிறது. ரஷியாவில் முதல் தடவையாக விஸ்வாசம் திரைக்கு வருகிறது. டிக்கெட் முன்பதிவுகள் சில தினங்களுக்கு முன்பு ஆரம்பித்து 3 நாட்களுக்கு விறுவிறுப்பாக விற்று தீர்ந்துள்ளன. 2 படங்கள் பற்றிய விமர்சனங்கள் சமூக வலைத் தளத்தில் பரவி வருகின்றன. 

விஸ்வாசம் படத்தை தணிக்கை செய்தபோது பார்த்த ஒருவர் படம் மாஸாக உள்ளது. பொழுதுபோக்கு அம்சங்கள் உள்ளன. அஜித் மிரட்டலாக நடித்து ரசிகர்கள் இதயத்தை திருடுகிறார் என்று பதிவிட்டுள்ளார். பேட்ட படம் பற்றி இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் கூறும்போது, ‘பேட்ட மாஸ் படமாக இருக்கும். ரஜினிக்காக விசே‌ஷமாக எழுதப்பட்ட தனித்துவமான கதை. ரசிகர்கள் விரும்பும் மாஸ் காட்சிகள் படத்தில்  இருக்கும்’’  என்றார். 

இன்றைய தினத்தை தொடர்ந்து நாளை (11–ந் தேதி) மற்றும் 14 ஆகிய தேதிகள் வேலை நாட்களாகவும், அதன்பின் 15, 16, 17 ஆகிய 3 நாட்களும் விடுமுறை நாட்களாகவும் இருந்தன. தற்போது அரசு பிறப்பித்துள்ள உத்தரவில் ஜனவரி 14–ந் தேதி விடுமுறை தினம் என்று அறிவித்து உள்ளது. 

இந்த அறிவிப்பினால் 12–ந்தேதி முதல் 17–ந்தேதி வரை தொடர்ச்சியாக 6 நாட்கள் விடுமுறை கிடைத்து இருப்பது இரண்டு படங்களுக்கும் சாதகமாக அமைந்துள்ளது. இந்த 6 நாட்களும் 5 காட்சிகள் திரையிட அனுமதியும் கிடைத்துள்ளது. பேட்ட விஸ்வாசம் படங்களுக்கு இந்த நீண்ட விடுமுறை அதிர்ஷ்டமாக அமைந்துள்ளது என்றும், இதனால் வசூல் எகிறும் என்றும் படக்குழுவினர் மகிழ்ச்சியில் உள்ளனர்.