சினிமா செய்திகள்

திண்டுக்கல்லில் விஸ்வாசம் பட டிக்கெட்டை கலர் ஜெராக்ஸ் எடுத்து பார்த்த ரசிகர்கள்; அதிர்ச்சி தகவல் + "||" + People watched Vishvamam film with Color Xerox Ticket in Dindigul

திண்டுக்கல்லில் விஸ்வாசம் பட டிக்கெட்டை கலர் ஜெராக்ஸ் எடுத்து பார்த்த ரசிகர்கள்; அதிர்ச்சி தகவல்

திண்டுக்கல்லில் விஸ்வாசம் பட டிக்கெட்டை கலர் ஜெராக்ஸ் எடுத்து பார்த்த ரசிகர்கள்; அதிர்ச்சி தகவல்
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு பகுதியில் விஸ்வாசம் படத்தின் டிக்கெட்டை கலர் ஜெராக்ஸ் எடுத்து நூற்றுக்கணக்கானோர் படம் பார்த்த‌ அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
திண்டுக்கல்,

நடிகர் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள விஸ்வாசம் படம் இன்று வெளியானது. வீரம், வேதாளம், விவேகம் ஆகிய படங்களை தொடர்ந்து சிவா இயக்கத்தில் 4வது முறையாக இணைந்து அஜித் இப்படத்தில் நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார்.

மேலும் யோகி பாபு, ரோபோ ஷங்கர், தம்பி ராமையா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இமான் இப்படத்திற்கு இசையமைள்ளார். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.

இப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கொடுத்தது. இதனை ரசிகர்கள் டிரெண்ட் செய்து கொண்டாடினர். கடந்தாண்டு அஜித் நடிப்பில் எந்த படமும் வெளியாகாததால், இன்று வெளியான இப்படத்தை காண ரசிகர்கள் அதிக அளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இந்த நிலையில், திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு பகுதியில் விஸ்வாசம் படத்தின் டிக்கெட்டை கலர் ஜெராக்ஸ் எடுத்து நூற்றுக்கணக்கானோர் படம் பார்த்த‌ தகவல் வெளியாகியுள்ளது.

கூட்டத்தை பயன்படுத்தி கொண்ட பலர், டிக்கெட்டை கலர் ஜெராக்ஸ் எடுத்து, முதல் காட்சியை பார்த்துள்ளனர். அளவுக்கு அதிகமான ரசிகர்கள் இருப்பதை அறிந்த திரையரங்க உரிமையாளர்கள் டிக்கெட்டை வாங்கி பரிசோதித்தபோது, கலர் ஜெராக்ஸ் எடுத்து படம் பார்த்த‌து தெரிய வந்துள்ளது. இதனால் திரையரங்க உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. டிக்கெட்டில் பிரதமர் படம்: ரெயில்வே, விமான போக்குவரத்து அமைச்சகங்களுக்கு நோட்டீஸ் - தேர்தல் கமிஷன் அதிரடி
ரெயில் டிக்கெட்டுகளிலும், விமான பாஸ்களிலும் பிரதமர் மோடி படத்தை அச்சிட்டு இருப்பது தொடர்பாக ரெயில்வே, சிவில் விமான போக்குவரத்து அமைச்சகங்களுக்கு நோட்டீஸ் அனுப்பி தேர்தல் கமிஷன் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.