சினிமா செய்திகள்

ரசிகர்களின் சந்தோசமே நமது சந்தோசம்; சென்னை திரும்பிய நடிகர் ரஜினிகாந்த் பேட்டி + "||" + Fans happiness is our happiness; Actor Rajinikanth

ரசிகர்களின் சந்தோசமே நமது சந்தோசம்; சென்னை திரும்பிய நடிகர் ரஜினிகாந்த் பேட்டி

ரசிகர்களின் சந்தோசமே நமது சந்தோசம்; சென்னை திரும்பிய நடிகர் ரஜினிகாந்த் பேட்டி
ரசிகர்களின் சந்தோசமே நமது சந்தோசம் என சென்னை திரும்பிய நடிகர் ரஜினிகாந்த் பேட்டியளித்து உள்ளார்.
சென்னை, 

நடிகர் ரஜினிகாந்த் ஓய்வு எடுத்து கொள்வதற்காக கடந்த டிசம்பர் 22ந்தேதி அமெரிக்கா சென்றார்.  அவரது மனைவி லதா உள்ளிட்ட குடும்பத்தினரும் உடன் சென்றனர்.  ஜனவரி 10ந்தேதி வரை 3 வாரங்கள் அங்கு தங்கி ஓய்வு எடுத்து கொள்வார் என தகவல் வெளியானது.  அமெரிக்காவில் தங்கும் ரஜினிகாந்த் முழு உடல் பரிசோதனை செய்து கொள்ளவும் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில் தனது ஓய்வை முடித்து கொண்டு நடிகர் ரஜினிகாந்த் சென்னை திரும்பினார்.  அவர் சென்னையில் செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியில், அனைவருக்கும் எனது பொங்கல் வாழ்த்துகள்.  

பேட்ட திரைப்படம் ரசிகர்களுக்கு பிடித்திருக்கிறது என்று கேள்விப்பட்டேன்.  மிக்க சந்தோஷம்.  அவர்களை சந்தோசப்படுத்துவதே முக்கியம்.  அவர்களின் சந்தோசமே நமது சந்தோசம் என கூறினார்.

இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்தின் அடுத்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு பிப்ரவரி மாதம் தொடங்கி ஏப்ரல் மாதம் வரை நடைபெறும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

1. பா.ஜ.க. தேர்தல் அறிக்கையை வரவேற்ற ரஜினிகாந்துக்கு பிரதமர் மோடி நன்றி
பா.ஜ.க. தேர்தல் அறிக்கையை வரவேற்ற நடிகர் ரஜினிகாந்துக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக ‘தினத்தந்தி’க்கு அளித்த சிறப்பு பேட்டியின் போது மோடியிடம் கேட்ட கேள்விகளும், அவற்றுக்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:–
2. 12வது ஐ.பி.எல். போட்டி; சேப்பாக்கம் மைதானத்தின் முன் குவிந்த ரசிகர்கள்
12வது ஐ.பி.எல். போட்டியை காணும் ஆவலில் சேப்பாக்கம் மைதானத்தின் முன் ரசிகர்கள் குவிந்துள்ளனர்.
3. தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்தை நேரில் சந்தித்து நலம் விசாரிக்கிறார் நடிகர் ரஜினிகாந்த்
தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்தை அவரது வீட்டில் நடிகர் ரஜினிகாந்த் நேரில் சந்தித்து நலம் விசாரிக்கிறார்.
4. நடிகர் ரஜினிகாந்த் மகள் திருமணத்திற்கான அழைப்பிதழை முதல் அமைச்சர் பழனிசாமியிடம் வழங்கினார்
நடிகர் ரஜினிகாந்த் தனது மகள் திருமணத்திற்கான அழைப்பிதழை முதல் அமைச்சர் பழனிசாமியிடம் இன்று வழங்கினார்.
5. நடிகர் ரஜினிகாந்த் போயஸ் தோட்ட சாலையில் தனியாக நடை பயிற்சி மேற்கொள்ளும் வீடியோ வெளியீடு
நடிகர் ரஜினிகாந்த் போயஸ் தோட்ட சாலையில் தனியாக நடை பயிற்சி மேற்கொள்ளும் வீடியோ வெளியாகி உள்ளது.