சினிமா செய்திகள்

மாட்டு வண்டியில் அமிதாப்பச்சன் + "||" + in bullock cart Amitabh

மாட்டு வண்டியில் அமிதாப்பச்சன்

மாட்டு வண்டியில் அமிதாப்பச்சன்
இந்தி பட உலகின் சூப்பர் ஸ்டாரான அமிதாப்பச்சன் மாட்டு வண்டியில் பயணம் செய்யும் படத்தை டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.
இந்தி பட உலகின் சூப்பர் ஸ்டாரான அமிதாப்பச்சன், கிராமத்து சூழலில் வாழ வேண்டும் என்ற தனது நீண்ட நாள் ஆசை இப்போது நிறைவேறி இருப்பதாக கூறி சாதாராண உடையில் மாட்டு வண்டியில் பயணம் செய்யும் படத்தை டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.

அதோடு கட்டிலில் உறங்குவது, பஸ்சில் பயணம் செய்வது போன்ற படங்களையும் பகிர்ந்துள்ளார். அந்த படங்களின் கீழ் “நீண்ட காலமாக கிராமத்து சூழலில் வாழ வேண்டும் என்பது எனது ஆசையாக இருந்தது. அது இப்போது நிறைவேறி இருக்கிறது. இதை மகிழ்ச்சியோடு அனுபவித்தேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த படங்களை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகிறார்கள். அமிதாப்பச்சனுக்கு ரூ.650 கோடி அசையும் சொத்துக்களும் ரூ.460 கோடி அசையா சொத்துக்களும் உள்ளன. சொந்தமாக 12 கார்கள், ரூ.36 கோடி நகைகள் உள்ளன. இவை தவிர நொய்டா, போபால், லக்னோ, அகமதாபாத், காந்தி நகர் பகுதிகளில் பல ஏக்கர் நிலங்கள் வைத்துள்ளார். மனைவி ஜெயா பச்சனுக்கு ரூ.1000 கோடிக்கு சொத்துக்கள் உள்ளன.

அமிதாப்பச்சன் நடித்து சமீபத்தில் தக்ஸ் ஆப் இந்துஸ்தான் படம் வெளியானது. இப்போது ஜூன்ட் என்ற இந்தி படத்தில் கால்பந்து பயிற்சியாளராக நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு மகராஷ்டிர மாநிலம் நாக்பூரில் நடந்து வருகிறது. இந்த படப்பிடிப்பின்போதுதான் மாட்டு வண்டியிலும் பஸ்சிலும் அவர் பயணம் செய்ததாக கூறப்படுகிறது.