சினிமா செய்திகள்

தமிழில் வரும் ராம் சரண் படம் + "||" + Ram Charan's film in Tamil

தமிழில் வரும் ராம் சரண் படம்

தமிழில் வரும் ராம் சரண் படம்
ராம் சரண் கதாநாயகனாக நடித்துள்ள ‘வினயை விதேயா ராமா’ என்ற தெலுங்கு படம் தமிழில் வெளியாகிறது.
பாகுபலிக்கு பிறகு தெலுங்கு நடிகர்கள் படங்கள் தமிழில் வெளியாகி வசூல் பார்க்கின்றன. அந்த வரிசையில் சிரஞ்சீவி மகனும் முன்னணி தெலுங்கு நடிகருமான ராம் சரண் கதாநாயகனாக நடித்து அதிக செலவில் தயாரிக்கப்பட்ட ‘வினயை விதேயா ராமா’ என்ற தெலுங்கு படமும் தமிழில் வெளியாகிறது. போயப்பட்டி சீனு இந்த படத்தை இயக்கி உள்ளார்.

‘பாரத் என்னும் நான்’ என்ற படத்தில் நடித்து தெலுங்கு ரசிகர்களை கவர்ந்த கியாரா அத்வானி கதாநாயகியாகவும் விவேக் ஓபராய் வில்லனாகவும் நடித்துள்ளனர். பிரசாந்த், சினேகா, மதுமிதா, முகேஷ் ரிஷி, ஜெபி, ஹரீஷ் உத்தமன், ஆர்யன் ராஜேஷ், ரவி வர்மன் ஆகியோரும் நடித்துள்ளனர்.

குடும்ப பின்னணியில் காதல், கலகலப்பு, அரசியல், செண்டிமெண்ட், வன்முறை, சாகசம், பொழுது போக்கு அம்சங்கள் நிறைந்த படமாக ‘வினயை விதேயா ராமா’ படம் உருவாகி உள்ளதாக இயக்குனர் தெரிவித்து உள்ளார். தேவிஸ்ரீ பிரசாத் இசை அமைக்க ரிஷி பஞ்சாபி, பண்டி ரமேஷ் ஆகியோர் ஒளிப்பதிவு செய்துள்ளனர்.

படத்தின் பாடல் காட்சிகள் பிரம்மாண்ட அரங்குகளில் படமாக்கப்பட்டுள்ளன. கிளைமாக்ஸ் சண்டை காட்சிக்கு மட்டும் ரூ.11 கோடி செலவிட்டுள்ளனர். கனல் கண்ணன் சண்டை பயிற்சி அளித்துள்ளார். இந்த படம் விரைவில் திரைக்கு வருகிறது.