சினிமா செய்திகள்

பாடகியாக ஆசைப்பட்ட 9 கல்லூரி மாணவிகளுக்கு வாய்ப்பு அளித்த இளையராஜா + "||" + Ilaiyaraja offered 9 college students

பாடகியாக ஆசைப்பட்ட 9 கல்லூரி மாணவிகளுக்கு வாய்ப்பு அளித்த இளையராஜா

பாடகியாக ஆசைப்பட்ட 9 கல்லூரி மாணவிகளுக்கு வாய்ப்பு அளித்த இளையராஜா
கல்லூரி மாணவிகள் 9 பேரைத் தான் இசையமைக்கும் அடுத்தடுத்த படங்களில் இசைஞானி இளையராஜா பாடகியாக அறிமுகம் செய்துவைக்கிறார்.
சென்னை,

இசைஞானி இளையராஜா சமீபத்தில் மகளிர் கல்லூரி விழாக்களில் கலந்து கொண்டார். அங்கே  அவரது பிறந்த நாள் விழாவையும் மாணவிகள் முன்னிலையில் கேக் வெட்டிக் கொண்டாடினார்.

இந்த நிகழ்ச்சியில் பேசியும், பாடியும் அவர் கல கலப்பூட்டினார். கல்லூரி மாணவிகளுடன் கலந்துரையாடியதுடன் அவர்களின்கேள்விகளுக்கும் பதிலளித்தார்.

அப்போது அவரது இசையைப் பற்றி மாணவிகள் சந்தேகங்கள், கேள்விகள்  கேட்டுத் தெரிந்து கொண்டனர். அப்போது அந்த இரண்டு கல்லூரிகளிலும் மாணவிகள் சிலர் பாடல்கள் பாடியதுடன், அவரது இசையில் தாங்கள் பாட விரும்புவதாகவும், அது தங்கள் கனவென்றும் மாணவிகள் தங்கள் விருப்பத்தை வெளியிட்டிருந்தனர்.

இந்த நிலையில், அந்த இரண்டு கல்லூரியிலும் இசை விருப்பமுள்ள, பாடகியாக ஆசைப்பட்ட மாணவிகள் சிலரை அழைத்துக் குரல் சோதனை நடத்தி, அவர்களில் பாடும் திறன் கொண்ட 9 மாணவிகளை இளையராஜா தேர்வு செய்து இருக்கிறார்.

இந்த ஒன்பது பேரும் இளையராஜா இசையமைக்கும் அடுத்தடுத்த படங்களில் பாடகியாக அறிமுகமாகவுள்ளனர்.