சினிமா செய்திகள்

குருவியார் கேள்வி-பதில்கள் + "||" + Kuruviyar Question and Answers

குருவியார் கேள்வி-பதில்கள்

குருவியார் கேள்வி-பதில்கள்
உங்கள் கேள்விகளுக்கு சூடாகவும், சுவையாகவும் பதில் அளிக்கிறார், குருவியார். கேள்விகளை அனுப்ப வேண்டிய முகவரி. குருவியார், தினத்தந்தி, சென்னை-600007
குருவியாரே, எந்திரன்’ படத்தின் 2–ம் பாகம் (2.0) என்ற பெயரில் வந்தது போல், ‘இந்தியன்’ படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பது போல், ‌ஷங்கர் டைரக்‌ஷனில் ‘முதல்வன்’ படத்தின் இரண்டாம் பாகம் தயாராகுமா? (பி.வெற்றி வினாயகம், சென்னை–1)

அப்படி ஒரு திட்டம் இதுவரை ‌ஷங்கரிடம் இல்லையாம். எதிர்காலத்தில் உருவானால் ஆச்சரியப்படுவதற்கில்லை என்கிறார்!

***

‘கனவுக்கன்னி’ திரிஷா தனது வீட்டில் எத்தனை நாய்களை வளர்க்கிறார்? (ப.ஆனந்த், வேலூர்)

திரிஷா, வீட்டில் 2 நாய்களை வளர்க்கிறார். வீட்டுக்கு வெளியே 10 நாய்களை வளர்க்கிறாராம். அந்த 10 நாய்களுக்கும் தினசரி உணவு திரிஷா வீட்டில்தான்!

***

குருவியாரே, ‘நடிகர் திலகம்’ சிவாஜிகணேசன் நடித்த ‘தில்லானா மோகனாம்பாள்’ படத்தைப் போல் நாதஸ்வர கலைஞரை கதாநாயகனாக வைத்து இன்னொரு படம் தயாராகுமா? (சி.தனசேகரன், திருச்சி)

நாதஸ்வர கலைஞரை கதாநாயகனாக வைத்து படம் தயாராகலாம். ஆனால் அது, ‘தில்லானா மோகனாம்பாள்’ மாதிரி சாதனை படமாக அமையாது. ‘நடிகர் திலகம்’ சிவாஜிகணேசனைப்போல் நாதஸ்வர கலைஞராக நடிக்கவும் முடியாது. அந்த படம், காலத்தால் அழிக்க முடியாத காவியம் என்றால், சிவாஜியின் நடிப்பு, ‘கின்னஸ்’ சாதனை!

***

கதாநாயகர்கள் தயாரிப்பாளர்களாக மாறுவது பற்றி...? (ஜி.இன்பராஜ், வேலப்பன்சாவடி)

சில கதாநாயகர்கள் தங்கள் மார்க்கெட்டை தூக்கி நிறுத்துவதற்காக படம் தயாரிக்கிறார்கள். சில கதாநாயகர்கள் கைவசம் நிறைய படங்கள் இருப்பது போன்ற மாயையை உருவாக்குவதற்காக படம் தயாரிக்கிறார்கள். ‘‘தயாரிப்பாளர்களின் வலியும், வேதனையும் இப்போது தெரிந்து இருக்கும்’’ என்று அந்த கதாநாயகர்களை பார்த்து சில தயாரிப்பாளர்கள் சந்தோ‌ஷப்படுகிறார்கள்!

***

குருவியாரே, குண்டாக இருந்து இப்போது மெலிந்து விட்ட அனுஷ்கா எத்தனை கிலோ எடை இருப்பார்? (டி.ஜேம்ஸ், புது வண்ணாரப்பேட்டை)

80 கிலோவாக இருந்த அனுஷ்கா, இப்போது 70 கிலோவாக குறைந்து இருக்கிறாராம். டூயட் காட்சிகளில் அவரை தூக்கி சுமக்கும் கதாநாயகர்களுக்கு, ஜாலி!

***

சிவகார்த்திகேயன் தயாரித்த ‘கனா’ படத்தின் வெற்றிக்கு யார் காரணம்? (வி.அன்புக்கரசன், நாகர்கோவில்)

சிறந்த கதைதான் முதல் காரணம். சத்யராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோரின் நடிப்பு, அருண்ராஜா காமராஜின் டைரக்‌ஷன் ஆகியோரின் சிறந்த பங்களிப்பு, இரண்டாவது காரணம்!

***

குருவியாரே, சமந்தாவுக்கும், காஜல் அகர்வாலுக்கும் இடையே என்ன விரோதம்? இருவரும் கடுமையாக மோதிக்கொண்டார்களாமே? (எச்.சாகுல் அமீது, கரூர்)

காஜல் அகர்வால் நடித்த பற்பசை விளம்பர பட வாய்ப்பை சமந்தா கைப்பற்றி விட்டாராம். இரண்டு பேரும் மோதிக்கொள்வதற்கு அந்த விளம்பர படம்தான் காரணம் என்கிறார்கள்!

***

கமல்ஹாசனுடன் ஒரு படத்தில் கூட நடிக்க முடியவில்லையே என்று கவலைப்படும் கதாநாயகி யார்? (கே.துரை, காஞ்சிபுரம்)

நயன்தாரா. இவர், ஏறக்குறைய எல்லா பெரிய கதாநாயகர்களுடனும் ஜோடியாக நடித்து விட்டார். கமல்ஹாசன் ஒருவரை தவிர..!

***

குருவியாரே, விஜய் சேதுபதிக்கு சரியான ஜோடி யார்? (எல்.மனோகர், தாரமங்கலம்)

காயத்ரி, ரம்யா நம்பீசன், ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகிய மூன்று பேரும் ஜாடிக்கேற்ற மூடி மாதிரி, விஜய் சேதுபதியுடன் கச்சிதமாக பொருந்துகிறார்களாம்!

***

அமலாபால் யாருக்கு போட்டி? (ஆர்.கவுதம், பெங்களூரு)

கவர்ச்சியாக நடிக்கும் அத்தனை கதாநாயகிகளுக்கும் போட்டி, அமலாபால்தான்! இவருடைய கவர்ச்சிகரமான சாதனைகளை இதுவரை வேறு எந்த கதாநாயகியும் முறியடிக்கவில்லையாம்!

***

குருவியாரே, முன்பெல்லாம் தரமான கதையம்சம் கொண்ட படங்கள் 100 நாட்கள், 200 நாட்கள் ஓடும். இப்போது எந்த பெரிய கதாநாயகன் நடித்தாலும், படம் 2 வாரங்கள்தான் ஓடுகின்றன. இதற்கு என்ன காரணம்? (கே.வித்யாசாகர், திருச்சி)

முன்பெல்லாம் புதிய படங்கள் 10 அல்லது 15 தியேட்டர்களில்தான் திரையிடப்படும். இப்போது 200 அல்லது 300 தியேட்டர்களில் படம் திரையிடப்படுகிறது. 100 நாட்கள் ஓடி வசூல் செய்த படங்கள், இப்போது இரண்டே வாரங்களில் வசூல் செய்து விடுகின்றன. இதுதான் அந்த ரகசியம்!

***

‘கண்களால் கைது செய்,’ ‘பருத்தி வீரன்,’ ‘சாருலதா’ போன்ற சிறந்த கதையம்சம் உள்ள படங்களில் கதாநாயகியாக நடித்த பிரியாமணி, சினிமாவை விட்டு ஒதுங்கி விட்டாரா? அவர் ஏன் நடிப்பதில்லை? (எஸ்.ராதாகிருஷ்ணன், மதுராந்தகம்)

பிரியாமணி திருமணம் செய்து கொண்ட பிறகு சினிமாவை விட்டு சில மாதங்கள் ஒதுங்கியிருந்தார். இப்போது அவர் மீண்டும் நடிக்க ஆரம்பித்து விட்டார். ‘இரண்டாவது இன்னிங்சில்’ அவரிடம் இருந்து நிறைய சாதனைகளை எதிர்பார்க்கலாம்!

***

குருவியாரே, சினிமா துறையில் நுழைய வேண்டும் என்றால் அழகு, பணம், திறமை மூன்றில் எது தேவை? (ஐ.ரிதனர், ஓவரூர்)

நடிப்பதற்கா, படம் தயாரிப்பதற்கா, டைரக்டு செய்வதற்கா?

***

கீர்த்தி சுரேசுக்கு ரசிகர் மன்றம் உள்ளதா? (ரவீந்திரன், கடலூர்)

இதுவரை இல்லை. ரசிகர் மன்றம் அமைப்பது தொடர்பாக இரு தரப்பிலும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது!

***

குருவியாரே, விஷாலுக்கு அவருடைய காதலி அனிஷாவுடன் எப்போது திருமணம் நடக்கும்? (சி.பி.தங்கதுரை, சிவகாசி)

வருகிற பிப்ரவரி அல்லது மார்ச் மாதத்தில், விஷால்–அனிஷா திருமணம் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது!

***

கார்த்திக்கு நகரவாசி வேடம் பொருந்துகிறதா, கிராமவாசி வேடம் பொருந்துகிறதா? (மா.சீனிவாசன், புதுச்சேரி)

இரண்டிலும் கார்த்தி பொருந்துகிறார் என்றாலும், கிராமவாசி வேடம்தான் அவருக்கு நூறு சதவீதம் பொருந்துவதாக ரசிகர்கள் சொல்கிறார்கள்!

***

குருவியாரே, தமிழ் திரையுலகில் தற்போது நடித்து வரும் நட்சத்திரங்களில் தமிழ் பேச தெரியாதவர்கள் யார்–யார்? (ஜெ.ராஜ்சிற்பி, தர்மபுரி)

மும்பையில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட எல்லா புது கதாநாயகிகளுக்கும் தமிழ் பேச தெரியாது!

***

காஜல் அகர்வால் நடித்து அடுத்து திரைக்கு வரும் படம் எது? (இரா.பொன் ஜெயந்தன், குளித்தலை)

‘குயின்’ படத்தின் தமிழ் பதிப்பான ‘பாரீஸ் பாரீஸ்!’’

***

குருவியாரே, நயன்தாராவின் காதலர் விக்னேஷ் சிவன், ‘நானும் ரவுடிதான்’ என்ற ஒரே ஒரு படத்துடன் இயக்குவதை நிறுத்தி விட்டாரே...ஏன்? (வி.பிரேம்குமார், காங்கேயம்)

அவர் இனிமேல் இயக்குவதை நிறுத்தி விட்டு, நடிப்பதில் கவனம் செலுத்தப்போகிறாராம். இதற்கான பயிற்சிகள் மற்றும் முயற்சிகளில் இரவு–பகலாக ஈடுபட்டு வருகிறார், அவர்!

***

‘சின்னத்திரை’யில் ஒளிபரப்பாகும் சில தொடர்களில் கதாநாயகன் தொடர்ந்து தோல்விகளையும், வில்லன் தொடர்ந்து வெற்றிகளையும் பெற்று வருகிறார்களே...ஏன்? (சண்முக சுந்தரம், உடையாப்பட்டி)

அது, அந்த தொடரை இயக்கி வருபவரின் உள்மனதில் ஊறிப்போய்விட்ட ரகசியமாம்!

***

தொடர்புடைய செய்திகள்

1. குருவியார் கேள்வி-பதில்கள்
உங்கள் கேள்விகளுக்கு சூடாகவும், சுவையாகவும் பதில் அளிக்கிறார், குருவியார். கேள்விகளை அனுப்ப வேண்டிய முகவரி.குருவியார், தினத்தந்தி, சென்னை-600007
2. குருவியார் கேள்வி-பதில்கள்
உங்கள் கேள்விகளுக்கு சூடாகவும், சுவையாகவும் பதில் அளிக்கிறார், குருவியார். கேள்விகளை அனுப்ப வேண்டிய முகவரி.குருவியார், தினத்தந்தி, சென்னை-600007
3. குருவியார் கேள்வி-பதில்கள்
உங்கள் கேள்விகளுக்கு சூடாகவும், சுவையாகவும் பதில் அளிக்கிறார், குருவியார். கேள்விகளை அனுப்ப வேண்டிய முகவரி குருவியார், தினத்தந்தி, சென்னை-600007
4. குருவியார் கேள்வி-பதில்கள்
உங்கள் கேள்விகளுக்கு சூடாகவும், சுவையாகவும் பதில் அளிக்கிறார், குருவியார். கேள்விகளை அனுப்ப வேண்டிய முகவரி. குருவியார், தினத்தந்தி, சென்னை-600007
5. குருவியார் கேள்வி-பதில்கள்
உங்கள் கேள்விகளுக்கு சூடாகவும், சுவையாகவும் பதில் அளிக்கிறார், குருவியார். கேள்விகளை அனுப்ப வேண்டிய முகவரி. குருவியார், தினத்தந்தி, சென்னை-600007