சினிமா செய்திகள்

ஓடும் காருக்குள் பாலியல் தொல்லை - இயக்குனர் மீது நடிகை புகார் + "||" + Actress complains against director - sexual harassment in running car

ஓடும் காருக்குள் பாலியல் தொல்லை - இயக்குனர் மீது நடிகை புகார்

ஓடும் காருக்குள் பாலியல் தொல்லை - இயக்குனர் மீது நடிகை புகார்
ஓடும் காருக்குள் பாலியல் தொல்லை கொடுத்ததாக இயக்குனர் மீது நடிகை புகார் தெரிவித்துள்ளார்.
நடிகைகளும் பெண் இயக்குனர்களும் ‘மீ டூ’வில் பாலியல் புகார் சொல்லி வருகிறார்கள். தெலுங்கு இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் பட வாய்ப்புக்கு படுக்கைக்கு அழைப்பதாக ஸ்ரீரெட்டி பரபரப்பு புகார் கூறினார். பாலியல் தொல்லை கொடுத்தவர்கள் பட்டியலையும் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார். தமிழ் நடிகர்கள், இயக்குனர்களும் இதில் சிக்கினார்கள்.


இந்தி நடிகை தனுஸ்ரீதத்தா இந்தி பட உலகில் பாலியல் தொல்லை இருப்பதாக அம்பலப்படுத்தினார். அங்குள்ள மேலும் சில நடிகைகளும் பெண் இயக்குனர்களும் ‘மீடூ’வில் பாலியல் புகார் கூறினார்கள். இந்த நிலையில் பிரபல இந்தி நடிகை பிதிதா பக்கும் இயக்குனர் மீது பாலியல் குற்றச்சாட்டு சொல்லி உள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:-

“பிரபல டைரக்டர் ராம்கோபாலிடம் உதவி இயக்குனராக இருந்த ஒருவர் என்னை அணுகினார். அவர் டைரக்டு செய்யும் புதிய படத்துக்கு கதாநாயகி தேர்வு செய்வதாக கூறினார். அந்த இயக்குனருடன் நான் நட்பாக பழகினேன். ஒரு நாள் விருந்து நிகழ்ச்சிக்கு சென்று விட்டு காரில் வீடு திரும்பினோம். அப்போது காருக்குள் என்னிடம் தவறாக நடந்தார்.

என்னை விட்டு விடு என்று அவரிடம் கெஞ்சினேன். அதற்கு அவர் லூசு மாதிரி பேசாதே. இருவரும் ஜாலியாக இருக்கலாம் என்று சொல்லி பாலியல் தொல்லை கொடுத்தார். கற்பழிப்பு முயற்சியில் இருந்து நான் தப்பி விட்டேன். நண்பர் என்று பழகியவர் இவ்வாறு நடந்து கொண்டது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. சினிமாவில் பாலியல் தொல்லைகளை தடுக்க நடிகர் சங்கத்தில் 9 பேர் கொண்ட ‘மீ டூ’ குழு
சினிமாவில் பாலியல் தொல்லைகளை தடுக்க நடிகர் சங்கத்தில் 9 பேர் கொண்ட ‘மீ டூ’ குழு அமைக்கப்பட உள்ளது.
2. நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை காட்டி என்ஜினீயரிங் மாணவிக்கு பாலியல் தொல்லை நண்பருடன் காதலன் கைது
நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை காட்டி, அதை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதாக மிரட்டி, என்ஜினீயரிங் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தனது நண்பருடன், காதலன் கைது செய்யப்பட்டார்.
3. கொருக்குப்பேட்டையில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை முதியவர் உள்பட 3 பேர் கைது
கொருக்குப்பேட்டையில், பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்த முதியவர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
4. கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் - முக்கிய குற்றவாளி திருநாவுக்கரசு கைது
கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் முக்கிய குற்றவாளி திருநாவுக்கரசை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
5. கோவை அருகே 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை; வளர்ப்பு தந்தை கைது
கோவை அருகே 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வளர்ப்பு தந்தையை போலீசார் கைது செய்தனர்.