சினிமா செய்திகள்

இளையராஜா விழாவில் ரஜினி, கமல் + "||" + Ilayaraja in the ceremony Rajini, Kamal

இளையராஜா விழாவில் ரஜினி, கமல்

இளையராஜா விழாவில் ரஜினி, கமல்
தயாரிப்பாளர் சங்கத்துக்கு நிதி திரட்டவும் இசையமைப்பாளர் இளையராஜாவின் திரையுலக சாதனைகளை பாராட்டவும் ‘இளையராஜா 75’ என்ற பெயரில் கலைவிழா சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் பிப்ரவரி 2, 3 ஆகிய தேதிகளில் நடக்க உள்ளது. தயாரிப்பாளர் சங்கம் இதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளது.
2-ந் தேதி நிகழ்ச்சியில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாள நடிகர் நடிகைகள் கலந்து கொள்கிறார்கள். ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு அவர்களும் விழாவில் பங்கேற்பது உறுதியாகி உள்ளது. மோகன்லால், மம்முட்டி, சிரஞ்சீவி, நாகார்ஜுனா, பாலகிருஷ்ணா, சிவராஜ்குமார் ஆகியோரையும் அழைத்துள்ளனர். இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கும் அழைப்பு விடுத்துள்ளனர்.


3-ந் தேதி இளையராஜாவின் இசைநிகழ்ச்சி நடக்கிறது. முன்னணி பாடகர்களும் பாடகிகளும் இதில் பங்கேற்று பாடுகிறார்கள். இந்த நிகழ்சிக்காக புதிய டீசர் தயாராகி உள்ளது. இந்த டீசரை விஷால், கார்த்தி, விஜய்சேதுபதி, ஜெயம் ரவி, ஆர்யா, விஷ்ணு விஷால், ஜீவா, அதர்வா, சந்தானம், நந்தா ஆகிய 10 கதாநாயகர்கள் ஒரே நேரத்தில் டுவிட்டரில் வெளியிட்டனர். விழாவில் கலந்து கொள்ளும்படி ரசிகர்களுக்கு அழைப்பும் விடுத்துள்ளனர்.

இந்த இசைநிகழ்ச்சி மூலம் தயாரிப்பாளர் சங்கத்துக்கு ரூ.10 கோடி நிதி திரட்டவும் அதை நலிந்த தயாரிப்பாளர்களுக்கு வீடு கட்ட நிலம் வாங்குவது உள்ளிட்ட நலத்திட்ட பணிகளுக்கு பயன்படுத்தவும் திட்டமிட்டு உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. மீண்டும் ‘தர்பார்’ படப்பிடிப்பில் ரஜினி, நயன்தாரா
ரஜினிகாந்த் ‘பேட்ட’ படத்துக்கு பின் ‘தர்பார்’ படத்தில் நடித்து வருகிறார். இதில் கதாநாயகியாக நயன்தாரா வருகிறார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார். இதில் ரஜினிகாந்த் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார்.
2. கமல்-ரஜினிக்கு மதுரையில் பிரமாண்ட பாராட்டு விழா - இயக்குனர் பாரதிராஜா திட்டம்
ரஜினி, கமல் ஆகிய இருவரின் திரை உலக சாதனைகளைப் பாராட்டும் விதமாக மதுரையில் பிரமாண்ட விழா நடத்த இயக்குநர் பாரதிராஜா திட்டமிட்டுள்ளார்.
3. ரஷியாவில் வெளியாகும் ரஜினியின் ‘2.0’
ரஷியாவில் ரஜினியின் ‘2.0’ திரைப்படம் வெளியாக உள்ளது.
4. சிவா இயக்கத்தில் ரஜினி?
டைரக்டர் சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.