சினிமா செய்திகள்

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட தயாராகும் நடிகர்கள் + "||" + Actors ready to contest parliamentary elections

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட தயாராகும் நடிகர்கள்

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட தயாராகும் நடிகர்கள்
நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட நடிகர்கள் தயாராகி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்தியாவில் 50-க்கும் மேற்பட்ட நடிகர்கள் அரசியலில் இருப்பதாக புள்ளி விவரம் சொல்கிறது. இவர்களில் பலர் அமைச்சர்களாகவும் எம்.பி., எம்.எல்.ஏக்களாகவும் பதவி வகித்துள்ளனர். மறைந்த எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, என்.டி.ராமராவ் ஆகியோர் முதல்-அமைச்சராகி ஆட்சி நடத்தி உள்ளனர்.

இப்போது கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை தொடங்கி அரசியலில் குதித்துள்ளார். வருகிற பாராளுமன்ற தேர்தலில் இந்த கட்சி போட்டியிடுகிறது. ரஜினிகாந்தும் விரைவில் கட்சி தொடங்குகிறார். இந்த வருடம் புதிதாக மேலும் சில நடிகர்கள் அரசியலுக்கு வருகிறார்கள்.

வில்லன் நடிகர் பிரகாஷ்ராஜ் வருகிற பராளுமன்ற தேர்தலில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடுவதாக அறிவித்து உள்ளார். கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூரு மத்திய தொகுதியில் அவர் நிற்கிறார். அவருக்கு ஆம் ஆத்மி கட்சி ஆதரவு தெரிவித்து உள்ளது. தமிழ் படங்களில் நடித்துள்ள பிரபல மலையாள நடிகர் மோகன்லால் திருவனந்தபுரம் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட தயாராவதாக தகவல். பா.ஜனதா கட்சி அவருக்கு டிக்கெட் கொடுக்க ஆர்வமாக உள்ளது. நரேந்திர மோடியை மோகன்லால் சந்தித்து விட்டு வந்துள்ளார்.

ரஜினிகாந்தின் 2.0 படத்தில் வில்லனாக வந்த அக்‌ஷய்குமாரும் பாராளுமன்ற தேர்தலில் டெல்லி அல்லது பஞ்சாப் மாநிலத்தில் ஏதேனும் ஒரு தொகுதியில் போட்டியிட விரும்புகிறார். நடிகை ஜெனிலியாவின் கணவரும் இந்தி நடிகருமான ரிதேஷ் தேஷ்முக் காங்கிரஸ் சார்பில் லத்தூர் தொகுதியில் போட்டியிட முயற்சிக்கிறார்.


தொடர்புடைய செய்திகள்

1. நாடாளுமன்ற தேர்தல் 2-ம் சுதந்திர போராட்டம்: பா.ஜனதாவை வீழ்த்த அனைத்து மாநில கட்சிகளும் ஒன்று சேர வேண்டும் - கொல்கத்தாவில் மு.க.ஸ்டாலின் பரபரப்பு பேச்சு
பா.ஜ.க.வை தனியாக இருந்து வீழ்த்த முடியாது என்றும், பா.ஜ.க.வுக்கு எதிராக அனைத்து மாநில கட்சிகளும், எதிர்க்கட்சியினரும் ஒன்று சேர வேண்டும் என்று கொல்கத்தாவில் நடந்த விழாவில் மு.க.ஸ்டாலின் பேசினார்.
2. நாடாளுமன்ற தேர்தல் தேதி மார்ச் முதல் வாரம் அறிவிக்கப்படும் - ஆயத்த பணிகளில் தேர்தல் கமிஷன் மும்முரம்
நாடாளுமன்ற தேர்தலை நடத்துவதற்கான ஆயத்த பணிகளில் தேர்தல் கமிஷன் மும்முரமாக ஈடுபட்டு உள்ளது. தேர்தல் தேதி மார்ச் மாதம் முதல் வாரத்தில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
3. நாடாளுமன்ற தேர்தலில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தி.மு.க. கூட்டணியில் தொடரும் - ஈ.ஆர்.ஈஸ்வரன் பேட்டி
நாடாளுமன்ற தேர்தலில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தி.மு.க. கூட்டணியில் தொடரும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் கூறினார்.
4. ‘நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றால் அனைத்து மாநிலங்களிலும் விவசாய கடன்களை தள்ளுபடி செய்வோம்’ - ராகுல்காந்தி உறுதி
நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால் அனைத்து மாநிலங்களிலும் விவசாய கடன்களை தள்ளுபடி செய்வோம் என்று ராகுல்காந்தி கூறினார்.
5. ‘நாடாளுமன்ற தேர்தல் நேர்மையாக நடத்தப்படும்’ - தலைமை தேர்தல் கமிஷனர் உறுதி
நாடாளுமன்ற தேர்தல் நேர்மையாக நடத்தப்படும் என தலைமை தேர்தல் கமிஷனர் உறுதியளித்தார்.