சினிமா செய்திகள்

பேட்ட, சர்கார், விஸ்வாசம் - ரஜினிகாந்த், விஜய், அஜித் வசூலில் நம்பர் ஒன் யார்? + "||" + Petta 4-day box office collection: Rajinikanth's film business fails to shatter Vijay's Sarkar record

பேட்ட, சர்கார், விஸ்வாசம் - ரஜினிகாந்த், விஜய், அஜித் வசூலில் நம்பர் ஒன் யார்?

பேட்ட, சர்கார், விஸ்வாசம் - ரஜினிகாந்த்,  விஜய், அஜித் வசூலில் நம்பர் ஒன் யார்?
தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிகைகளில் வெளியான பேட்ட, சர்கார், விஸ்வாசம் ஆகியவற்றின் வசூல்களில் ரஜினிகாந்த், விஜய், அஜித் வசூலில் நம்பர் ஒன் யார்.
சென்னை

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரஜினிகாந்த் நடித்த பேட்ட படமும், அஜித் குமார் நடித்த விஸ்வாசம் படமும் வெளியானது.

இரண்டு படங்களுமே ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்ததால் பலத்தபோட்டி ஏற்பட்டது. ரஜினி, அஜித் ரசிகர்கள் இதனை திருவிழா போல கொண்டாடி மகிழ்ந்தார்கள். சில இடங்களில் மோதலும் நடைபெற்றது.

தொடர்ந்து 2 படங்களில் எது வெற்றி படம், எது வசூலில் அதிகம் என்று ரஜினி-அஜித் ரசிகர்கள் சமூகவலைதளங்களில் கடும் மோதலில் ஈடுபட்டு வருகிறார்கள்.

சென்னையில் மல்டி பிளக்ஸ் தியேட்டர்கள் தான் அதிகம். இங்கே பேட்ட படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. பி மற்றும் சி சென்டர்கள் என கூறப்படும் இதர பகுதிகளின் வசூலைப் பார்த்தால் தமிழகத்தில் ‘விஸ்வாசம்‘ தான் அதிகம்.

தமிழகத்தில் பேட்ட வசூல் ரூ.23 கோடி ஆகும். ஆனால் விஸ்வாசம் தமிழகத்தில் ரூ.26 கோடி வசூலித்துள்ளது என கூறப்பட்டது.

பேட்ட முதல் நாள் ரூ 1.12 கோடி வசூலித்து  மிகவும் நேர்த்தியான விமர்சனங்களைப் பெற்றது. பேட்ட அதன் இரண்டாவது நாளில் ரூ. 1.08 கோடி வசூலிப்பதன் மூலம் வேகத்தை தக்கவைத்துக் கொண்டது. மூன்றாவது நாளில் ரூ. 1.29 கோடியை வசூலித்து  25 சதவீதம்  அதிகரித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை ரூ.1.32 கோடி  வசூலித்தது. மொத்தம் 4 நாட்களில் ரூ.4.81 கோடி வசூலித்து உள்ளது.

வசூலை பொருத்தமட்டில்  விஜய்  தொடர்ந்து முதல் இடத்தில் தான் உள்ளார். ரஜினி, அஜித் 2-வது இடத்திற்கு போராடி வருகிறார்கள்.

ரஜினிகாந்தின் 2.0  ரூ 10.09 கோடி வசூலித்தது. ஆனால்  பேட்ட அதைவிடை குறைவாகவை வசூல் செய்து உளளது. பேட்ட சர்காரின் சாதனையை முறியடிக்கும் என வர்த்தக நிபுணர்கள் கணித்து இருந்தனர்.பேட்ட முதல் வாரம் ரூ.9- 10 கோடி வசூல் செய்ய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

விஜயின் சர்கார்  தீபாவளி விடுமுறை தினத்தன்று வெளியிடப்பட்டது, இது சென்னை பாக்ஸ் ஆபிஸில் நல்ல துவக்கத்தை கொடுத்தது. சர்க்கார் மொத்த  வசூல் சாதனையை முறியடிக்க வாய்ப்பு உள்ளது.

படம்சர்கார்2.0பேட்ட
நாள் 1 ரூ.2.41 கோடிரூ.2.64 கோடிரூ.1.12 கோடி
நாள் 2ரூ.2.32 கோடிரூ.2.13 கோடிரூ.1.08 கோடி
நாள் 3ரூ.1.28 கோடிரூ.2.57 கோடிரூ.1.29 கோடி
நாள் 4ரூ.1.36 கோடிரூ.2.75 கோடிரூ.1.32 கோடி
மொத்தம்ரூ.7.37 கோடிரூ. 10.09 கோடிரூ.4.81 கோடி

தொடர்புடைய செய்திகள்

1. பாகிஸ்தானை சேர்ந்த நடிகர்கள் மற்றும் கலைஞர்களுக்கு பாலிவுட் சினிமாவில் நடிக்க தடை
பாகிஸ்தானை சேர்ந்த நடிகர்கள் மற்றும் கலைஞர்களுக்கு அனைத்திந்திய திரைப்படப் பணியாளர்கள் சங்கம் தடைவிதித்துள்ளது.
2. ஸ்ரீதேவியின் நினைவு நிகழ்ச்சியில் அஜித், ஷாலினி பங்கேற்பு
மறைந்த ஸ்ரீதேவியின் நினைவு நாளையொட்டி, சென்னையில் வைத்து ஸ்ரீதேவிக்கு இன்று திதி அளிக்கப்பட்டது. இதில் நடிகர் அஜித், ஷாலினி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
3. சாயிஷாவுக்கு காதல் தின வாழ்த்து சொல்லி, திருமண அறிவிப்பை வெளியிட்ட ஆர்யா
நடிகை சாயிஷாவுடனான திருமணம் குறித்து காதலர் தினத்தன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார் நடிகர் ஆர்யா!
4. ரஜினியின் மகள் சவுந்தர்யா திருமண விழா; எடப்பாடி பழனிசாமி, கமல்ஹாசன் நேரில் வாழ்த்து
ரஜினியின் மகள் சவுந்தர்யா திருமண விழாவில் எடப்பாடி பழனிசாமி கமல்ஹாசன் நேரில் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்
5. என்னைப்போல் ஒருத்தி: நடிகை அனுஷ்கா சர்மா ஆச்சரியம்
நடிகை அனுஷ்கா ஷர்மாவின் தோற்றத்தை போன்று அச்சுஅசலாக அமெரிக்க பாடகி ஜூலியா மைக்கேல்ஸ் என்பவர் காட்சியளிப்பது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஆசிரியரின் தேர்வுகள்...