சினிமா செய்திகள்

நடிகர் சங்க செயற்குழு 20-ந் தேதி கூடுகிறது + "||" + Actor Association Committee meeting on 20

நடிகர் சங்க செயற்குழு 20-ந் தேதி கூடுகிறது

நடிகர் சங்க செயற்குழு 20-ந் தேதி கூடுகிறது
தென்னிந்திய நடிகர் சங்க செயற்குழு கூட்டம் கடந்த 12-ந் தேதி நடைபெறுவதாக இருந்தது. ஆனால் பொங்கல் பண்டிகையையொட்டி தள்ளிவைத்து விட்டனர்.
தற்போது வருகிற 20-ந் தேதி நடிகர் சங்க செயற்குழுவை கூட்ட முடிவு செய்துள்ளனர். நடிகர் சங்க தலைவர் நாசர், பொதுச்செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி மற்றும் நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள் இதில் கலந்துகொள்கின்றனர்.

இந்த கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நடிகர் சங்கத்துக்கு 2015-ல் தேர்தல் நடத்தப்பட்டு விஷால் அணியினர் பொறுப்புக்கு வந்தனர். இவர்களின் 3 வருட பதவி காலம் கடந்த அக்டோபர் மாதமே முடிந்தது. ஆனால் நடிகர் சங்க கட்டிட பணிகள் முடியாததால் தேர்தலை தள்ளி வைத்தனர்.

தற்போது நடிகர் சங்க கட்டிட பணிகள் தீவிரமாக நடக்கின்றன. ஓரிரு மாதங்களில் கட்டுமான வேலைகள் முடிந்துவிடும் என்றும் மே அல்லது ஜூன் மாதம் திறப்பு விழா நடைபெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. செயற்குழுவில் கட்டிட பணிகள் மற்றும் நடிகர் சங்கத்துக்கு தேர்தல் நடத்துவது உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்படும் என்று தெரிகிறது.

நடிகர் சங்க கட்டிடம் கட்ட ரூ.30 கோடிக்கு மேல் செலவாகி இருப்பதாக கூறப்படுகிறது. மேற்கொண்டு ஆகும் செலவுகள் குறித்தும் செயற்குழுவில் ஆலோசிக்க உள்ளனர்.