சினிமா செய்திகள்

கால்பந்து விளையாட்டு கதையில் விஜய்? + "||" + Football game story line in Vijay?

கால்பந்து விளையாட்டு கதையில் விஜய்?

கால்பந்து விளையாட்டு கதையில் விஜய்?
விளையாட்டை மையமாக வைத்து அதிக படங்கள் வருகின்றன. சிவகார்த்திகேயன் தயாரித்து சமீபத்தில் திரைக்கு வந்து ஓடிக்கொண்டிருக்கும் ‘கனா’ படம் பெண்கள் கிரிக்கெட்டை பற்றிய கதை.
சிவகார்த்திகேயன் கிரிக்கெட் பயிற்சியாளராக இதில் வந்தார். கபடி விளையாட்டை வைத்து வெண்ணிலா கபடி குழு படத்தின் இரண்டாம் பாகம் தயாராகிறது.

அமீர் உள்பட சில இயக்குனர்கள் நடிப்பில் பெண்கள் கபடி பற்றிய படம் ஒன்று தயாராகிறது. அஜித் நடிப்பில் திரைக்கு வந்துள்ள விஸ்வாசம் படத்திலும் ஓட்டப்பந்தய காட்சிகள் உள்ளன. ஏற்கனவே குத்துச்சண்டையை மையமாக வைத்து மாதவன் நடிப்பில் இறுதி சுற்று, கிரிக்கெட் விளையாட்டை வைத்து ஜீவா, ஓட்டப்பந்தய விளையாட்டை வைத்து எதிர்நீச்சல் ஆகிய படங்கள் வந்துள்ளன.

இந்த நிலையில் விஜய் அடுத்து நடிக்க உள்ள புதிய படம் கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து தயாராவதாக தகவல் கசிந்துள்ளது. இதில் அவர் பெண்கள் கால்பந்து பயிற்சியாளர் கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தை அட்லி இயக்குகிறார். தெறி, மெர்சல் படங்களுக்கு பிறகு மூன்றாவது தடவை இந்த படத்தில் இணைந்துள்ளனர்.

இதில் கதாநாயகியாக நயன்தாரா நடிக்கிறார். இதன் படப்பிடிப்பை வருகிற 20-ந் தேதி சென்னையில் தொடங்க திட்டமிட்டு உள்ளனர். தீபாவளிக்கு படம் திரைக்கு வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. மாறுபட்ட கதையம்சத்துடன் விஜய் நடிக்கும் 63-வது படம்
‘நாளைய தீர்ப்பு’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான விஜய், இதுவரை 62 படங்களில் நடித்து இருக்கிறார். இவருடைய 62-வது படம், ‘சர்கார்.’
2. விஜய் படத்தில் 3 கதாநாயகிகள்?
விஜய் நடித்த ‘சர்கார்’ படம் கடந்த நவம்பர் மாதம் திரைக்கு வந்தது. ரூ.250 கோடிக்கு மேல் இந்த படம் வசூல் ஈட்டியதாகவும் கூறப்பட்டது.
3. சர்கார் படத்திற்கு எதிராக நடிகர் விஜய் மீது கேரளாவில் வழக்கு
சர்கார் படத்திற்கு எதிராக நடிகர் விஜய் மீது கேரளாவில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.
4. சர்கார் படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நடிகர் விஜய் உருவபொம்மை எரிப்பு அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
சர்கார் படத்துக்கு எதிராக ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்ட அ.தி.மு.க. வினர் நடிகர் விஜய் உருவபொம்மையை தீ வைத்து எரித்தனர்.
5. உலக அளவில் பாக்ஸ் ஆபிஸில் விஜய் சர்கார் முதல் நாள் ரூ. 66.6 கோடி வசூல்
உலக அளவில் பாக்ஸ் ஆபிஸில் விஜய் சர்கார் முதல் நாள் ரூ. 66.6 கோடி வசூல் செய்துள்ளது. வசூலில் சர்கார் நான்காவது மிகப்பெரிய தென் இந்திய படமாக உள்ளது.

ஆசிரியரின் தேர்வுகள்...