சினிமா செய்திகள்

கோடநாடு விவகாரம் குறித்து முதல்வர் பழனிசாமி விளக்கமளிக்க வேண்டும்- கமல்ஹாசன் + "||" + Concerning the Kodanadu issue Chief Minister Palanisamy should explain- Kamal

கோடநாடு விவகாரம் குறித்து முதல்வர் பழனிசாமி விளக்கமளிக்க வேண்டும்- கமல்ஹாசன்

கோடநாடு விவகாரம் குறித்து முதல்வர் பழனிசாமி விளக்கமளிக்க வேண்டும்- கமல்ஹாசன்
கோடநாடு விவகாரம் குறித்து முதல்வர் பழனிசாமி விளக்கமளிக்க வேண்டும் என கமல்ஹாசன் கூறினார்.
சென்னை

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் 24-ந் தேதி கொள்ளை சம்பவம் அரங்கேறியது. இதனை தடுக்க முயன்ற வீட்டு காவலாளி ஓம்பகதூர் கொலை செய்யப்பட்டார்.

இந்த கொலை-கொள்ளை வழக்கில் கேரளாவை சேர்ந்த கூலிப்படை தலைவன் ஷயான், மனோஜ் உள்பட கூட்டாளிகள் 10 பேர் கைது செய்யப்பட்டனர். ஜெயலலிதாவின் கார் டிரைவர் கனகராஜ், ஷயானின் மனைவி மற்றும் குழந்தை வெவ்வேறு சாலை விபத்துகளில் சிக்கி பலியாகினர்.

கோடநாடு எஸ்டேட்டில் பணியாற்றிய கம்ப்யூட்டர் ஆபரேட்டரும் உயிர் இழந்தார். அடுத்தடுத்து நிகழ்ந்த இந்த மரணங்கள் பெரும் சந்தேகங்களை கிளப்பின.

தற்போது கோடநாடு விவகாரம் குறித்த வழக்கு நீலகிரி கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் கைதான கூலிப்படை தலைவன் ஷயான், அவனது கூட்டாளி மனோஜ் ஆகியோர் ஜாமீனில் வெளியே வந்தனர்.

இந்த நிலையில் கோடநாடு விவகாரம் தொடர்பாக ஷயான், மனோஜ் மற்றும் ‘தெகல்கா’ இணையதள புலனாய்வு பத்திரிகை முன்னாள் ஆசிரியர் மேத்யூஸ் சாமுவேல் ஆகியோர் இணைந்து கடந்த 11-ந் தேதி டெல்லியில் ஆவணப்படம் ஒன்றை வெளியிட்டனர். அதில் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை தொடர்புபடுத்தி குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

தன் மீதான குற்றச்சாட்டு முற்றிலும் உண்மைக்கு மாறானது என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

அ.தி.மு.க. சார்பில் முதல்-அமைச்சர் மீது அவதூறு தகவல் பரப்பியவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை மத்திய குற்றப்பிரிவு ‘சைபர் க்ரைம்’ போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

இந்த நிலையில் சென்னை விமானநிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன்  கோடநாடு விவகாரம் குறித்து முதல்வர் பழனிசாமி விளக்கமளிக்க வேண்டும் என கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. ‘அரசியல் என்னுடைய தொழில் அல்ல’ கமல்ஹாசன் பரபரப்பு பேட்டி
தேர்தல் முடிவுகள் ஊக்கத்தை தந்திருப்பதாகவும், அரசியல் தன்னுடைய தொழில் அல்ல என்றும் கமல்ஹாசன் பரபரப்பாக பேசினார்.
2. தேர்தல் தோல்வியால் எங்களுக்கு ஏமாற்றம் இல்லை -கமல்ஹாசன்
தேர்தல் தோல்வியால் எங்களுக்கு ஏமாற்றம் எதுவும் இல்லை என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்தார்.
3. மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் கமல்ஹாசனுக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கியது உயர் நீதிமன்ற கிளை
மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் கமல்ஹாசனுக்கு, மதுரை உயர்நீதிமன்ற கிளை நிபந்தனை முன் ஜாமீன் வழங்கியது.
4. வேலாயுதம்பாளையம் பிரசார கூட்டத்தில் கமல்ஹாசன் மீது செருப்புகள்-முட்டை வீச்சு
வேலாயுதம்பாளையத்தில் நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற கமல்ஹாசன் மீது செருப்புகள் மற்றும் முட்டை வீசப்பட்டன.
5. அரவக்குறிச்சி தொகுதியில் பணப்பட்டுவாடா தொடங்கி விட்டது தேர்தல் ஆணையம் கண்டுகொள்ளுமா? கமல்ஹாசன் கேள்வி
அரவக்குறிச்சி தொகுதியில் பணப்பட்டுவாடா தொடங்கி விட்டது. இதை தேர்தல் ஆணையம் கண்டுகொள்ளுமா? என கமல்ஹாசன் தேர்தல் பிரசாரத்தில் கேள்வி எழுப்பினார்.