சினிமா செய்திகள்

இந்தியன் 2 படத்தின் பா்ஸ்ட் லுக் போஸ்டா் வெளியீடு + "||" + Indian 2 movie first look Poster Release

இந்தியன் 2 படத்தின் பா்ஸ்ட் லுக் போஸ்டா் வெளியீடு

இந்தியன் 2 படத்தின் பா்ஸ்ட் லுக் போஸ்டா் வெளியீடு
இந்தியன் 2 படத்தின் பா்ஸ்ட் லுக் போஸ்டா் வெளியிடப்பட்டுள்ளது.
சென்னை,

இந்தியன் 2 படத்தின் பா்ட்ஸ் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

கமல்ஹாசன், ஷங்கா் கூட்டணியில் கடந்த 22 ஆண்டுகளுக்கு முன்னா் இந்தியன் படம் வெளியானது.  ஊழல், லஞ்சம் ஆகிய தளங்களை அடிப்படையாகக் கொண்டு உருவான இந்தப்படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்தது.


பின்னா் கமல்ஹாசன், ஷங்கா் கூட்டணியில் எந்தவொரு படமும் வெளியாகாத நிலையில் இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தை தயாரிக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. படத்திற்கான அதிகாரப்பூா்வ அறிவிப்பை படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா நிறுவனம் கமல்ஹாசனின் பிறந்த நாளில் வெளியிட்டது.

இந்நிலையில் இந்தியன் 2 படத்துக்கான பா்ஸ்ட் லுக் போஸ்டா் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பா்ஸ்ட் லுக் போஸ்டரில் கமல்ஹாசன் வா்மக்கலையுடன் இடம் பெற்றிருக்கும் புகைப்படம் வெளியாகி உள்ளது. ஏற்கனவே இந்தியன் முதல் பாகத்தில் கமல்ஹாசன் வா்மக்கலையை கையாண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த படத்திற்கு அனிருத் ரவிசந்தர் இசை அமைக்கிறார். ஒளிப்பதிவாளராக ரவி வர்மன், கலை இயக்குநராக முத்துராஜ், பாடல்களை தாமரை, விவேக் ஆகியோர் எழுதுகின்றனர்.

மேலும் வருகின்ற 18ந் தேதி முதல் படத்தின் படப்பிடிப்பு பணிகள் தொடங்க உள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது.