சினிமா செய்திகள்

ஸ்ரீதேவி மரணத்தை மையப்படுத்தும் கண்சிமிட்டல் அழகி பிரியா வாரியார் நடித்த குளியலறை காட்சி -கணவர் நோட்டீஸ் + "||" + Sridevi Bungalow: Boney Kapoor Slaps Legal Notice on Priya Prakash Varrier Film

ஸ்ரீதேவி மரணத்தை மையப்படுத்தும் கண்சிமிட்டல் அழகி பிரியா வாரியார் நடித்த குளியலறை காட்சி -கணவர் நோட்டீஸ்

ஸ்ரீதேவி மரணத்தை மையப்படுத்தும் கண்சிமிட்டல் அழகி பிரியா வாரியார் நடித்த குளியலறை காட்சி -கணவர் நோட்டீஸ்
ஸ்ரீதேவி மரணத்தை மையப்படுத்தும் கண்சிமிட்டல் அழகி பிரியா வாரியார் நடித்த குளியலறை காட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து ஸ்ரீதேவி கணவர் போனி கபூர் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.
மும்பை 

கடந்த ஆண்டு கண் சிமிட்டலால் ஒட்டுமொத்த இளைஞர்களையும் கொள்ளை கொண்ட நடிகை பிரியா வாரியார் நடிப்பில் வெளியாகவிருக்கும் திரைப்படம் ஸ்ரீதேவி பங்களா படத்தை பிரசாந்த்  மாம்பூலி இயக்கியுள்ளார். இந்நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் டிரெய்லர் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஏனெனில், கடந்த ஆண்டு நடிகை ஸ்ரீதேவி துபாயில் குளியல் தொட்டியில் மூச்சுதிணறி இறந்துபோனார். தற்போது, வெளியான டீசரில் நடிகை பிரியா வாரியார் குளியல் தொட்டியில் இறந்துகிடப்பது போன்ற காட்சி உள்ளது. இந்நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தயாரிப்பாளரும், ஸ்ரீதேவியின் கணவருமான போனி கபூர் இயக்குநருக்கு சட்டப்படி நோட்டீஸ் அனுப்பி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ஆனால், இந்த படத்தில் ஸ்ரீதேவி என்பது பொதுவான பெயர் என்றும் இதனை நான் முறைப்படி சந்திப்பேன் என இயக்குநர் கூறியுள்ளார்.

1 நிமிடமும் 49 வினாடியும் ஓடும்  ஸ்ரீதேவி பங்களா  டிரெய்லரில்  பிரியா வாரியர்  கிளாமராக தோன்றுகிறார்.  டீசர் முடிவில்,  ஸ்ரீதேவியின் மர்ம மரணம் குறித்த குறிப்புகளைக் காட்டும் ஒரு குளியல் தொட்டியும் காட்டப்படுகிறது. 
தொடர்புடைய செய்திகள்

1. 2 வருடம் கழித்து ஷேவ் செய்த நடிகர் மாதவன்
நடிக்கும் சினிமாவுக்காக நடிகர் மாதவன் 2 வருடம் கழித்து ஷேவ் செய்துள்ளார்.
2. நடிகர் விஷாலுக்கு அக்டோபர் 9-ந் தேதி திருமணம்
நடிகர் விஷாலுக்கும் அவரது காதலியான அனிஷாவுக்கும் சமீபத்தில் திருமண நிச்சயதார்த்தம் நடந்த நிலையில் இவர்களது திருமண தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
3. நடிகர் விஷாலின் அயோக்யா வெளியாகவில்லை : ரசிகர்கள் ஏமாற்றம் !
நடிகர் விஷாலின் அயோக்யா வெளியாகவில்லை. இதனால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்து உள்ளனர்.
4. பெண்களின் பொய்யான செக்ஸ் புகாரில் இருந்து ஆண்களை பாதுகாக்க "மென் டூ" இயக்கம்
ஆண்களுக்கு எதிராக பழி தீர்ப்பதற்காக, பாலியல் குற்ற வழக்குகளை பெண்கள் தவறாக பயன்படுத்துவதாக கூறி "மென் டூ" என்ற இயக்கத்தை, சமீபத்தில் பாலியல் குற்றவழக்கில் கைது செய்யப்பட்ட நடிகரின் நண்பர்கள் துவங்கியுள்ளனர். #mentoo
5. நடிகர் பார்த்திபன் தன்னை தாக்கியதாக உதவியாளர் புகார்
நடிகர் பார்த்திபன் தன்னை தாக்கியதாக, அவரது உதவியாளர் நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.