சினிமா செய்திகள்

‘சைரா நரசிம்ம ரெட்டி’ படத்தில் புதிய தோற்றத்தில் விஜய் சேதுபதி + "||" + Vijay Sethupathi is the new face of 'Sira Narasimha Reddy'

‘சைரா நரசிம்ம ரெட்டி’ படத்தில் புதிய தோற்றத்தில் விஜய் சேதுபதி

‘சைரா நரசிம்ம ரெட்டி’ படத்தில் புதிய தோற்றத்தில் விஜய் சேதுபதி
விஜய் சேதுபதி, படத்துக்கு படம் கதாபாத்திரங்களில் வித்தியாசம் காட்டுகிறார். பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, ஆரஞ்சு மிட்டாய், நானும் ரவுடிதான், சேதுபதி, தர்மதுரை, விக்ரம் வேதா ஆகிய படங்களில் அவரது திறமை வெளிப்பட்டது.
தாதா, திருடன், டாக்டர், போலீஸ் அதிகாரி உள்பட அழுத்தமான வேடங்களில் நடித்துள்ளார். சீதக்காதி படத்தில் 80 வயதுள்ள நாடக நடிகராக வந்தார். கடந்த வாரம் வெளியான ரஜினியின் பேட்ட படத்தில் வில்லனாக நடித்து இருந்தார். சூப்பர் டீலக்ஸ் படத்தில் ஷில்பா என்ற பெயரில் திருநங்கையாக நடித்து வருகிறார். சமந்தா, பஹத் பாசில் ஆகியோரும் இதில் நடிக்கின்றனர்.

தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் தயாராகும் ‘சைரா நரசிம்ம ரெட்டி’ என்ற சரித்திர படத்தில் சிரஞ்சீவியுடன் நடித்து வருகிறார். இதில் சிரஞ்சீவி மன்னராகவும், விஜய் சேதுபதி அவரது மெய்க்காப்பாளராகவும் நடிக்கிறார்கள். நயன்தாரா ராணியாக நடிக்கிறார். விஜய் சேதுபதியின் தோற்றத்தை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

அந்த படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இது விஜய் சேதுபதிக்கு முதல் தெலுங்கு படம். அடுத்து மலையாள படமொன்றிலும் நடிக்கிறார்.

தொடர்புடைய செய்திகள்

1. விஜய் சேதுபதி, தனுஷ் படங்களுக்கு தடை
நடிகர் விஜய் சேதுபதி மற்றும் தனுஷ் ஆகியோரின் படங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
2. விஜய் சேதுபதியின் புதிய படம் ‘சங்கத்தமிழன்’
விஜய் சேதுபதியின் புதிய படத்துக்கு சங்கத்தமிழன் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.
3. விஜய் சேதுபதி ஜோடியாக ராஷிகன்னா-நிவேதா பெத்துராஜ்
விஜய் சேதுபதி ஜோடியாக ராஷிகன்னா, நிவேதா பெத்துராஜ் ஆகிய இருவரும் ஜோடிகளாக நடிக்கிறார்கள்.
4. சபரிமலைக்கு பெண்கள் செல்வதை ஆதரித்த விஜய் சேதுபதிக்கு எதிர்ப்பு
சபரிமலை அய்யப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் வழிபடலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளாவில் போராட்டங்கள் நடந்தன.
5. சர்வதேச பிரச்சினைகளை பேசும் விஜய் சேதுபதியின் புதிய படம்
விஜய் சேதுபதி படத்துக்கு படம் வித்தியாசமான கதை மற்றும் கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்.