சினிமா செய்திகள்

கமல்ஹாசன் நடிக்கும் ‘இந்தியன்-2’ படப்பிடிப்பு நாளை தொடக்கம் + "||" + Kamal Haasan's 'Indian-2' shoot starts tomorrow

கமல்ஹாசன் நடிக்கும் ‘இந்தியன்-2’ படப்பிடிப்பு நாளை தொடக்கம்

கமல்ஹாசன் நடிக்கும் ‘இந்தியன்-2’ படப்பிடிப்பு நாளை தொடக்கம்
கமல்ஹாசன், இயக்குனர் ஷங்கர் கூட்டணியில் வந்து வெற்றி பெற்ற படம் இந்தியன்.
22 வருடங்களுக்கு பிறகு அந்த படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தயாராகிறது. இந்த படத்துக்கான ஆரம்பகட்ட பணிகள் கடந்த சில மாதங்களாக நடந்தன. படப்பிடிப்பு நடத்த வேண்டிய இடங்களையும் ஷங்கர் நேரில் சென்று பார்த்தார்.

கமல்ஹாசனும் தனது தோற்றத்தை மாற்றுவதற்கான மேக்கப் டெஸ்ட் எடுத்தார். வெளிநாட்டு மேக்கப் கலைஞர்கள் அவரை வயதான தோற்றத்துக்கு மாற்றி புகைப்படங்கள் எடுத்தனர். தற்போது அந்த பணிகள் முடிந்து படக்குழுவினர் படப்பிடிப்புக்கு தயாராகி உள்ளனர். நாளை (18-ந் தேதி) படப்பிடிப்பு தொடங்க இருப்பதாக அறிவித்து உள்ளனர்.

சென்னையில் உள்ள பொழுதுபோக்கு பூங்காவில் பிரமாண்ட அரங்குகள் அமைத்து உள்ளனர். கமல்ஹாசன் 2, 3 மாதங்கள் படப்பிடிப்பில் தொடர்ச்சியாக கலந்து கொள்கிறார். கதாநாயகியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். சித்தார்த்தும் முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறார். இதில் கமல்ஹாசனின் வயதான தோற்றத்தை வர்ம கலையின் குறியீட்டுடன் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

இந்த தோற்றம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. முதல் பாகத்தில் கமல்ஹாசன் வர்ம கலையால் லஞ்சம் வாங்கும் அரசு அதிகாரிகளை வீழ்த்துவதுபோல் காட்சிகள் இருந்தன. இரண்டாம் பாகத்திலும் சண்டை காட்சிகள் வர்ம கலையை மையப்படுத்தி அமைத்துள்ளனர். இது முழுமையான அரசியல் படமாக இருக்கும் என்று கமல்ஹாசன் கூறியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

1. மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் கமல்ஹாசனுக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கியது உயர் நீதிமன்ற கிளை
மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் கமல்ஹாசனுக்கு, மதுரை உயர்நீதிமன்ற கிளை நிபந்தனை முன் ஜாமீன் வழங்கியது.
2. வேலாயுதம்பாளையம் பிரசார கூட்டத்தில் கமல்ஹாசன் மீது செருப்புகள்-முட்டை வீச்சு
வேலாயுதம்பாளையத்தில் நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற கமல்ஹாசன் மீது செருப்புகள் மற்றும் முட்டை வீசப்பட்டன.
3. அரவக்குறிச்சி தொகுதியில் பணப்பட்டுவாடா தொடங்கி விட்டது தேர்தல் ஆணையம் கண்டுகொள்ளுமா? கமல்ஹாசன் கேள்வி
அரவக்குறிச்சி தொகுதியில் பணப்பட்டுவாடா தொடங்கி விட்டது. இதை தேர்தல் ஆணையம் கண்டுகொள்ளுமா? என கமல்ஹாசன் தேர்தல் பிரசாரத்தில் கேள்வி எழுப்பினார்.
4. கமல்ஹாசன் பிரசாரத்திற்கு தடை விதிக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை மறுப்பு
கமல்ஹாசன் பிரசாரத்திற்கு தடை விதிக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை மறுப்பு தெரிவித்துள்ளது.
5. அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் கமல்ஹாசன் இன்று பிரசாரம்
அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் இன்று பிரசாரம் செய்கிறார்.